விடுகதைகள்
குழந்தைக்கு இந்தக் கைதான் பலமான கை.
1. குழந்தைக்கு இந்தக் கைதான் பலமான கை.
2. காலில்லாத பந்தலைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியம்.
3. எத்தனை முறை சுற்றினாலும் என்றும் தலை சுற்றாது இவனுக்கு!
4. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை.
5. எண்ணெயில் வளருவான். எனக்கும் உனக்கும் அழகு தருவான்.
6. வீட்டுக்கு வீடு தவறாது வரும் புத்தாண்டு விருந்தாளி.
7. ராஜா ராணி ஆட்டம், போலீஸை கண்டால் ஓட்டம்.
8. கரியாக இருந்தவனைக் குளிப்பாட்டினால், பளீரென்று மின்னினான்.
9. இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல; இடியோசை தரும் வானமும் அல்ல..!
விடைகள்:
1. அழுகை, 2. ஆகாயம், 3. மின்விசிறி, 4. எலுமிச்சம்பழம்,
5. தலைமுடி, 6. காலண்டர், 7. சீட்டாட்டம், 8. வைரம், 9. வாணவெடி
Advertisement
Advertisement