ஞாயிறு கொண்டாட்டம்

12 லட்சம் புத்தகங்கள்

கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படையான ஒன்று. கல்வி ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்லாது, நாட்டின் வளர்ச்சியையே மென்மேலும் உயரச் செய்யும் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதான். அனைத்துத் தரப்பு மக்களும் கல்வ

தி. இன்பராஜ்

கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படையான ஒன்று. கல்வி ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்லாது, நாட்டின் வளர்ச்சியையே மென்மேலும் உயரச் செய்யும் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதான்.

அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கடன், உதவித் தொகை எனப் பல உதவிகளை அரசு செய்து வந்தாலும், இலவச பாடப் புத்தகங்கள் என்பது இன்னும் கல்லூரி மாணவர்களை எட்டவில்லை.

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்குக் கல்விக் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல சலுகைகளால் இன்று ஏராளமானோர் கல்லூரிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் எதிர்பார்ப்புபோல, ஏழை மாணவ, மாணவிகள் அனைவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, கடந்த 13 ஆண்டுகளாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகப் பாடப் புத்தகங்களை வழங்கி வருகின்றனர் திருச்சியைச் சேர்ந்த ராக்சிட்டி நலச் சங்கத்தினர். இந்தச் சங்கத்தின் துணை அமைப்பான ராக்சிட்டி நலச் சங்கக் கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை முலம் கடந்த 1998-ம் ஆண்டு இந்தத்

திட்டம் தொடங்கப்பட்டது. தங்களது சங்கத்தின் சேவை, எதிர்காலத் திட்டம் ஆகியவை பற்றி நம்மோடு பகிந்து கொண்டார் சங்கத்தின் திட்ட இயக்குநர் அசோக் காந்தி. இனி அவர்...

""இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதலாமாண்டில் 107 ஏழை மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பின்னர், படிப்படியாக திருச்சியில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்தத் திட்டத்தைப் பற்றி கூறினோம்.

2003-04 ஆம் கல்வியாண்டில் 1,500-க்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்ததால் அதிக புத்தகங்கள் வழங்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், 470 பேரை தேர்வு செய்து அவர்களுக்குப் புத்தகம் வழங்கினோம். தற்போது எங்களிடம் ஏறத்தாழ 12 லட்சம் கல்லூரிப் பாடப் புத்தகங்கள் உள்ளன. 2010-11 ஆம் கல்வியாண்டில் 1,343 பேருக்கு புத்தகங்களை வழங்கியுள்ளோம். பாடத் திட்டம் மாறும்போது புதிய புத்தகங்களை வாங்கி விநியோகிக்கிறோம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளுக்கு இதுவரை புத்தகங்களை வழங்கியுள்ளோம். கல்வியாண்டின் இறுதியில் பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து திரும்பப் பெற்று அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவோம். மேலும், எங்களிடம் புத்தகம் பெற்று 85 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவ, மாணவிகளைப் பாராட்டி ரொக்கப் பரிசும் வழங்கி வருகிறோம். இவை அனைத்தும் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் வழங்கப்படும் தொகையைக் கொண்டுதான் செய்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுக்கு 1,000 மாணவர்களுக்குக் குறையாமல் புத்தகங்களை வழங்கி வருகிறோம். எங்களிடம் புத்தகங்கள் பெற்று படித்த மாணவர்களில் பலர் இன்று நல்ல நிலையில் உள்ளனர். எங்களிடம் புத்தகம் பெற்று படித்து தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் ஒரு பெண் | 5,000 வழங்கினார். இதேபோல, பலர் உதவி செய்துள்ளனர். இந்த உதவி எங்களை மேலும் ஊக்குவிக்கிறது.

வரும் காலங்களில் பொறியியல் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்' என்றார் அசோக் காந்தி.

திருச்சி ஜாபர் ஷா தெருவில் உள்ள ராக்சிட்டி நலச் சங்கத்துக்கு உதவி செய்ய விரும்புவோர் www.rw a book bank.org   என்ற இணையதள முகவரியிலும் rw a book b ank @gm ail.com   என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT