முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

விளையாட வயது தடை இல்லை!

சென்னை ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அந்த வீராங்கனை. அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சி. ஈட்டி எறிந்து கொண்டிருந்தவருக்கு வயது 56. முதியோர் தடகளத

ஞாயிறு கொண்டாட்டம்

விளையாட வயது தடை இல்லை!

சென்னை ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அந்த வீராங்கனை. அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சி. ஈட்டி எறிந்து கொண்டிருந்தவருக்கு வயது 56. முதியோர் தடகளத

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

சென்னை ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அந்த வீராங்கனை. அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சி. ஈட்டி எறிந்து கொண்டிருந்தவருக்கு வயது 56.

முதியோர் தடகளத்தில் கம்பு ஊன்றித் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதலில் சர்வதேச அளவில் சாதனை படைத்த வீராங்கனை ருக்மணி தேவி. வயது கூடகூட பலருக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் போய்விடும் என்று சொல்வார்கள். ஆனால் ருக்மணி தேவி விஷயத்தில் இது தலைகீழாக இருக்கிறது.

சமீபத்தில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று முடிந்த ஆசிய மூத்தோர் தடகளத்தில் கம்பு ஊன்றித் தாண்டும் போட்டியில் (போல் வால்ட்) சாதனை படைத்த இந்திய வீராங்கனையாகத் திரும்பியுள்ளார். இந்த வயதிலும் இளம் வீராங்கனையைப் போல துடிப்பான பெண்ணாக இருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி:

இன்னமும் தடகளப் போட்டிகளின் மீதான ஆர்வம் உங்களுக்குக் குறையாமல் இருப்பது ஏன்?

சிறுவயது முதலே எனக்கு விளையாட்டுப் போட்டிகள் என்றால் உயிர். சிறுவயதில் கூடைப்பந்து, வாலிபாலும் விளையாடுவேன். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பரிமளித்து பின்னர் தேசிய போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உயர்ந்தேன்.

இந்தியன் ரயில்வேஸ் அணிக்காக 7 ஆண்டுகள் வாலிபால் விளையாடியிருக்கிறேன். அப்போது வென்ற கோப்பைகள் ஏராளம்.

இப்போதும் ஈட்டி எறிதல், போல் வால்ட், உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு விளையாட்டுதான் ஒரே வழி. வயதாகிவிட்டதே என்ற கவலை இருப்பதில்லை. விளையாட்டில் ஈடுபடுவதால் மன உறுதி அதிகரிக்கிறது. விளையாட்டு, உடற்பயிற்சி என்று தொடர்வதால் உடலும் மனமும் ஒரு சேர உறுதிப்படுகிறது. நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் இது உதவுகிறது.

எப்போது முதல் முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்று வருகிறீர்கள்?

கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு முதியோர் தடகள போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அடுத்த ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற உள்ள உலக மூத்தோர் தடகள போட்டியில் 1.7 மீட்டர் தாண்டவேண்டும் என்று இலக்கு வைத்துள்ளேன்.

பயிற்சி..?

காலை, மாலை இரு வேளைகளிலும் கடினமான பயிற்சி. இந்தப் பயிற்சி இல்லாவிட்டால் எந்த போட்டியிலும் நாம் ஜொலிக்க முடியாது.

இப்பொழுது யார்யாரிடம் பயிற்சி பெறுகின்றீர்?

சென்னையில் ராஜேஸ்வரி, ராஜசேகர் ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.

இந்த வயதிலும் விளையாட வேண்டுமானால் அதற்கு குடும்ப, சமூக ஒத்துழைப்பு அவசியம், உங்களுக்கு எப்படி?

எனது குடும்பத்தார் இல்லாவிட்டால் நான் ஒரு போட்டியில்கூட பங்கேற்க முடியாது. எனது கணவர், 2 மகள்கள், எனது மாமியார் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த வயதிலும் வெற்றி பெற முடிகிறது.

தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை தலைமைக்

கிளையில் பணிபுரிந்து வருகிறேன். நான் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும்போது எங்கள் கிளை அதிகாரிகள், சக ஊழியர்கள் பாராட்டு தெரிவிப்பர். அதுவே எனக்கு மிகப்பெரிய பூஸ்ட். அதுமட்டுமல்லாமல் எங்கள் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்திலிருந்தும் பாராட்டும் ரொக்கப் பரிசும் கிடைக்கும். ஊழியர் சங்க நிர்வாகிகளின் பாராட்டை மறக்க முடியாது.

உங்களுக்கு ஆதரவு தரும் அமைப்பு..?

நாங்கள் தமிழக மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் (டிஎன்எம்ஏஏ) கீழ் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். இதன் தலைவராக முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம் உள்ளார். ஒவ்வொரு தேசிய, ஆசிய சர்வதேச போட்டிக்கும் தேர்வு போட்டி வைக்கப்பட்டு அங்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவர். அதன் பின்னர் அவர்கள் அணிக்கு வந்து போட்டிகளில் பங்கேற்க முடியும்.

சமீபத்தில் முடிந்த மலேசிய தடகளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர், வீராங்கனைகள் 79 பதக்கங்கள் கைப்பற்றினர். மூத்தோர் தடகளத்தில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரயிலில் 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி)மைதானங்களில் இலவச பயிற்சி பெறலாம். வெளிநாடு சென்று பதக்கம் பெற்றுத் திரும்பும்போது அதற்குண்டான விமானக் கட்டணத்தையும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அளிக்கிறது. இதன் உறுப்பினர் செயலராக உள்ள சத்யவிரத சாஹு, மூத்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு உதவியாக இருக்கிறார்.

மூத்தோர் தடகள பிரிவில் 35 பிளஸ், 40 பிளஸ், 45 பிளஸ், 50 பிளஸ் என ...ஐந்தைந்து ஆண்டுகளாகக் கூட்டிக் கொண்டே 85 பிளஸ் பிரிவு வரை வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். எங்களுக்குத் தேவையான உதவி, ஸ்பான்ஸர் போன்ற அனைத்து வசதிகளையும் டிஎன்எம்ஏஏ தலைவர் செங்கை சிவம் செய்து தந்து விடுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →