முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அமெரிக்காவில் பகவத் கீதையை விதைத்த இந்தியர்!

அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராமா, ஹரே ராமா, ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்வதோடு, பகவத்கீதையின் இனிய நாதத்தை பரப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:15 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 8:59 PM

அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராமா, ஹரே ராமா, ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்வதோடு, பகவத்கீதையின் இனிய நாதத்தை பரப்பினார்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்.

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு. எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையதாகிறது மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சம்.

Advertisement

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுக்கிறான்.

இதைக் கண்ட அவனுடைய தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்துக்காக போரிடும் பொழுது உறவு முறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்குகிறார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றி தெரிவிக்கிறார். அந்த உரையாடலின் கருத்துகளின் தொகுப்பே பகவத் கீதை. பகவத்கீதை அமெரிக்காவிலும் இன்

றைக்கும் பிரபலம். கீதை அமெரிக்காவில் பரவியது குறித்தும் அதைப் பரப்பியவர் குறித்தும் பெங்களூரின் இஸ்கான் கோயில் நிர்வாகி ஸ்ரீபதிதாசா கூறுகிறார்:

இந்துக்களின் புனிதநூலாக கருதப்படும் பகவத் கீதையை இந்தியாவுக்குள் அடக்கிவைக்க விரும்பாத கொல்கத்தாவைச் சேர்ந்த கெüடிய மடத்தின் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்சுவாமி, மேற்கத்திய நாடுகளில் பகவத் கீதையை ஆங்கிலத்தில் பரப்பும் பொறுப்பை ஏ.சி.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவிடம் ஒப்படைக்கிறார்.

ஹிந்து சமயக் கோட்பாடுகளின் வாசனைகூட அறியாத ஒரு சமூகத்தில் பகவத் கீதையின் மணம் பரப்பும் பொறுப்பை சவாலாக ஏற்றுக்கொண்டு, 1965 ஆகஸ்ட்

13-ல் அமெரிக்காவுக்கு கப்பலில் புறப்படுகிறார் பிரபுபாதா. 37 நாள்கள் பயணத்துக்குப் பிறகு நியூயார்க் நகரை தொட்ட பிரபுபாதாவிடம் 40 ரூபாய் மட்டுமே மீதமிருந்தது.

இரும்புப்பெட்டி முழுவதும் புத்தகங்கள், கொடை, உலர் தானியங்கள் மட்டுமே வைத்திருந்த பிரபுபாதாவுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஓராண்டு காலம் தன்னந்தனியே வேதங்களையும், புராணங்களையும் புரட்டியபடியே இருந்த அவர், அமெரிக்காவில் கிருஷ்ணரின் பகவத் கீதையைப் பரப்புவதற்கு காலம் கனிந்ததாக உணர்கிறார்.

இப்பணியை மேற்கொள்வதற்காக 1966 ஜூலை 11ம் தேதி இன்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னெஸ்(இஸ்கான்) என்ற அமைப்பை நிறுவுகிறார்.

அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பயணம் செய்து ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராமா, ஹரே ராமா, ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்வதோடு, பகவத்கீதையின் இனிய நாதத்தைப் பரப்புகிறார்.

இந்தியா, அமெரிக்காவை கடந்து உலகம் முழுவதும் கிருஷ்ணரின் தத்துவம் மற்றும் பகவத்கீதையின் பக்திமணம் கமழ வேண்டும் என்பதற்காக 1965 முதல் 1977 வரை கடுமையாக உழைக்கும் பிரபுபாதா, 6 கண்டங்களில் 108 கிருஷ்ணர் கோயில்களை நிறுவுகிறார்.

அங்கெல்லாம் கிருஷ்ணரையும், பகவத் கீதைக்கான விதைகளையும் தூவுகிறார். 1970 மற்றும் 1971ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 33 கிருஷ்ணர் கோயில்களை நிறுவியிருக்கிறார் என்பதில் இருந்தே அவருடையே அர்ப்பணிப்பு, வேதாந்தத்தின் மீதுள்ள தாகம் புலப்படுகிறது.

1977 நவம்பர் 14ம் தேதி பூலோகத்தில் இருந்து தேவலோகம் புறப்படுவதற்கு முன் பகவத்கீதையை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கிறார். ஒருமுறை பிரபுபாதாவை சந்தித்த அன்றைய இந்திய பிரதமர் லால்பகதூர்சாஸ்திரி,தாங்கள் மொழிப் பெயர்த்துள்ள பகவத்கீதை நூல்களை இந்தியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் அனைவரும் படித்தறிய வேண்டும் என்கிறார்.

பகவத்கீதையின் 700 வசனங்களை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ள பிரபுபாதா, உலகின் ஒவ்வொரு நுனியிலும் கிருஷ்ணரின் போதனைகளைக் கொண்டுசெல்ல 1972}ல் பக்திவேதாந்த நூல் அறக்கட்டளையை நிறுவுகிறார். அதேபோல டாலஸ் நகரில் குருகுல பள்ளியை நிறுவி வேதகால வாழ்க்கைமுறையை அறிமுகம் செய்துவைக்கிறார்.

தள்ளாத வயதிலும் தளராமல் பல கண்டங்களுக்குப் பயணித்த பிரபுபாதா, 1989 கூட்டங்களில் பகவத்கீதை போதனையில் ஈடுபட்டிருக்கிறார். அறிவு, அறிவியல் கொட்டிக்கிடக்கும் மேற்கத்திய உலகமே பிரபுபாதா மொழி பெயர்த்த பகவத்கீதையை கண்டு அதிசயிப்பதற்கு கிருஷ்ணரின் நல்வழிப்படுத்தும் போதனைகளே காரணம்'' என்கிறார் பிரபுபாதாவின் சீடரான ஸ்ரீபதிதாசா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.