முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேயிலைக்கு வந்த பாதிப்பு!

துருவப் பிரதேசங்களில் பனிப் பாறைகள் உருகுவது, கடல்நீர் மட்டம் அதிகரிப்பது, மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

துருவப் பிரதேசங்களில் பனிப் பாறைகள் உருகுவது, கடல்நீர் மட்டம் அதிகரிப்பது, மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயில் அடிப்பது, வெயிலடிக்கும் நேரத்தில் புயல் வீசுவது, கரை புரண்டோடிய ஆறுகள் காய்ந்து கிடப்பது... இவை உலக வெப்பமயமாதலால், பருவநிலை மாறுதல்களினால் ஏற்படுபவை. ஆனால்  விளைவுகள் இவை மட்டுமல்ல.

விவசாய விளை பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன. நமது நாட்டில் தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிப்படைகிறது. உலகில் அதிகமாகத் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலையில் பாதிக்கும் மேல் அசாமில் விளைகிறது. ஆனால் வெப்பமயமாதல், பருவநிலை மாறுதல்களால் தேயிலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கோடைக் காலத்தில் 35 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையிலிருந்து 50 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை உயரும். 48 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை உயரும்போது, தேயிலை காய்ந்து... கருகிப் போகும்.

வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பதுபோல அதிக வெப்பம் ஒரு சமயம் என்றால், அதிக மழை இன்னொரு சமயம். ஆண்டில் இரண்டு மாதங்கள்  தேயிலைத் தோட்டப் பகுதிகளில் மழை கொட்டோகொட்டென்று கொட்டித் தீர்ப்பதால், மண் சரிவு ஏற்பட்டு, தேயிலைத் தோட்டங்கள் அழிவுக்குள்ளாகின்றன. பருவநிலை மாற்றத்தால்  தேயிலை வளர வேண்டிய அளவுக்கு வளராமல் நறுங்கிப் போகிறது.

அதுமட்டுமல்ல, தேயிலையில் இருக்க வேண்டிய வேதிப் பொருட்களின் தன்மை கூட மாறிப் போகின்றன. இதனால் தேயிலையின் சுவையும் மாறிவிடுகிறது. நேற்று வாங்கிய டீத்தூள் போல இல்லையே... என்று வேறொரு கம்பெனியின் டீத் தூளுக்கு மக்கள் மாறிவிடுகிறார்களாம்!

இந்தப் பாதிப்பு நம் நாட்டில் மட்டுமில்லை; எல்லாம் உலகமயம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.