முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வாழ்நாள் சாதனையாளர்- ஓவியர் சங்கர் 

சென்னையின் கார்ட்டூனிஸ்ட்டுகள், யாரை மறந்தாலும் "பொதுஜனம்' புகழ் ஆர்.கே. லக்ஷ்மணை மறப்பதில்லை.

ஞாயிறு கொண்டாட்டம்

வாழ்நாள் சாதனையாளர்- ஓவியர் சங்கர் 

சென்னையின் கார்ட்டூனிஸ்ட்டுகள், யாரை மறந்தாலும் "பொதுஜனம்' புகழ் ஆர்.கே. லக்ஷ்மணை மறப்பதில்லை.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

சென்னையின் கார்ட்டூனிஸ்ட்டுகள், யாரை மறந்தாலும் "பொதுஜனம்' புகழ் ஆர்.கே. லக்ஷ்மணை மறப்பதில்லை. சென்ற வாரம் கார்ட்டூனிஸ்டுகள் நடத்திய அஞ்சலி கூட்டத்தில், முதுபெரும் ஓவியர் சங்கருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்தனர். சங்கர் என்றால் வேறு எந்த சங்கரும் அல்ல. "அம்புலிமாமா' சங்கர்தான். வயது 95. இன்னமும் ஓவியம் வரைகிறார் என்பதால் கொடுக்கும் விருது மிகப் பொருத்தம்!
 அவரை கௌரவிப்பதோடு நின்று விடாமல், சிறந்த கார்ட்டூனிஸ்ட் என்று தேவாவையும், "கல்கி' பிள்ளையையும் பாராட்டினார்கள். மினியேச்சர் ஆர்ட்டிஸ்ட் என சுரேந்திராவுக்கும், சிற்பியான இசக்கி முத்துவுக்கும், ஆணியையும் நூலையும் வைத்துக்கொண்டே ஓவியம் வரையும் மோகனுடுவுக்கும் பாராட்டுகள் வழங்கப்பட்டன.
 அவர் தொழில் கண் மருத்துவத் துறை என்றாலும், ராம்கி கார்ட்டூன் வரைவார். அவர்தான் இந்த விழாவின் அச்சாணி. பின்னணிப் பாடகி சினேகா நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்க, "பொதுஜனம்' லக்ஷ்மண் பற்றி சுருக்கமாகப் பேசினார் லதா ரகுநாதன்.
 கார்ட்டூனிஸ்ட்டுகளுக்குக் கை வலிக்கும். அதனால் அக்குபஞ்சர் பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார் கார்ட்டூனிஸ்ட் தேவா. விரல்கள் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். படத்துடன் விளக்கங்கள் அளித்தார்.
 - சித்தார்த்

முழு கட்டுரையைப் படிக்க →