முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

5 மொழிகளில் வர்மா படம்

கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளைப் பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:


கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளைப் பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார்.

கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்கள் ஒரு வழியை கண்டறிந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது "க்ளைமாக்ஸ்' படம் ஷ்ரேயோஸ் ஈடியில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த ஓடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பேர் படத்தை பார்த்துள்ளனர். "க்ளைமாக்ஸ்' படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து,  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான "நேக்டு நங்கா நக்னம்' படத்தையும் இதே தளத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக்கிடைக்கும். இந்தத் தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.