சவாலை ஏற்ற த்ரிஷா
இந்தியாவைப் பசுமையாக்க "க்ரீன் இந்தியா' என்ற பெயரில் சேலஞ்ச் ஒன்றை தெலுங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் துவக்கினார்.
இந்தியாவைப் பசுமையாக்க "க்ரீன் இந்தியா' என்ற பெயரில் சேலஞ்ச் ஒன்றை தெலுங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் துவக்கினார். நடிகர் பிரகாஷ்ராஜ், க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகள் நட்டு புகைப்படங்கள் வெளியிட்டார். மேலும் த்ரிஷா, மோகன்லால், சூர்யா, ரக்ஷித் ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரையும் இந்த சவாலை ஏற்க பரிந்துரை செய்தார். தற்போது நடிகை த்ரிஷா, பிரகாஷ்ராஜ் விடுத்த சவாலை ஏற்று இரண்டு மரக்கன்றுகள் நட்டு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.” நீங்கள் அனைவரும் உங்கள் பங்கைச் செய்து பசுமையான இந்தியாவை நோக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்''” என்றும் தெரிவித்துள்ளார்.