சாயிஷாவின் பாக்சிங் விடியோ
"வனமகன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் "கடைக்குட்டி சிங்கம்', "ஜூங்கா',
"வனமகன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் "கடைக்குட்டி சிங்கம்', "ஜூங்கா',
"கஜினிகாந்த்', "காப்பான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுடன் "டெடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது, நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில் கரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இந்தநிலையில் சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து பாக்சிங் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். அதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது ஆர்யா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பயிற்சி கொடுப்பவரை செம்ம குத்து குத்துகிறார் சாயிஷா. இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.