மூன்றாவது அணி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அதன் தேர்தலும் எப்போதும் சர்ச்சைகள் நிறைந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அதன் தேர்தலும் எப்போதும் சர்ச்சைகள் நிறைந்தது. தேர்தல் முடிந்து நிர்வாகம் பொறுப்புக்கு வந்தாலும், இன்னொரு தரப்பு நீதிமன்றத்தை நாடி நிர்வாகத்தை முடக்கிப் போடும். இதுதான் இந்த சங்கத்தின் தொடர் கதை. இப்போது இந்த சங்கத்தில் இருந்தே புதிய சங்கம் உருவாகி விட்டது. பாரதிராஜா தலைமையில் "நடப்பு தயாரிப்பாளர் சங்கம்' உருவாகி செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலும் வேகம் எடுத்துள்ளது. கலைப்புலி எஸ். தாணு தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி தலைமையில் இன்னொரு அணியும் களத்தில் இருக்க, இப்போது புதிய அணி. இதில் முற்றிலும் சின்ன சின்ன தயாரிப்பாளர்கள். இதுவரை பதவி வகித்தவர்கள் யாரும் இல்லாத புதிய நிர்வாகிகள் வேண்டும் என்பதே இந்த அணியின் தேர்தல் வாக்குறுதி. இதற்கான அறிமுக கூட்டத்தில் விஜயசேகரன், எஸ்.டி. சுரேஷ்குமார், ராமச்சந்திரன் தயாளன், தங்கம் சேகர், திருப்பூர் செல்வராஜ், திருநெல்வேலி ஜெயக்குமார், அமல்ராஜ், தன சண்முக மணி, வெங்கடேஷ் துருவா மற்றும் பல தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் சில முக்கிய முடிவுகளை எடுத்து தேர்தல் களத்தில் இறங்குகிறது இந்த மூன்றாவது அணி.