இந்தியாவின் விண்வெளி சாதனைகள்
இந்தியா முதன் முதலில் பத்து செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தியது.
இந்தியா முதன் முதலில் பத்து செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தியது. ஸி-9 என்ற ராக்கெட் மூலம் பி.எஸ்.எல்.வி பல செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதில் இரண்டு இந்தியாவுடையது மீதி இதர நாடுகளுடையது.
ரஷியாவுக்குப்பின் பத்திற்கும் மேற்பட்டச் செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்ணுக்கு செலுத்திய உலகின் இரண்டாவது நாடு இந்தியா.
இந்தியாவின் முதல் வானிலை ஆராய்ச்சி நிலையம் பம்பாயில் நிறுவப்பட்டது.
இந்தியாவில் முதல் வெற்றிகரமான கிரையோஜினிக் ராக்கெட் என்ஜின் பரிசோதனை, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் 2006-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தியாவில் முதல் ராக்கெட் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட "நைக் அப்பாச்சி' என்ற ஏழு மீட்டர் உயரமும் 715 கிலோ எடையும் கொண்ட ராக்கெட் தும்பாவிலிருந்து செலுத்தப்பட்டது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ரோகிணி-75 தும்பாவிலிருந்து 1967-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி செலுத்தப்பட்டது. இது 6.9 கிலோ எடையும் மூன்று இன்ச் குறுக்களவும் கொண்டது.
இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா சோவியத் யூனியனிலிருந்து 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி ஏவப்பட்டது.
இந்தியாவின் முதல் செய்தித் தொடர்பு செயற்கைக் கோள் ஆப்பிள் 1981-ஆம் ஆண்டு ஜுன் 19-ஆம் தேதி பிரெஞ்சு கயானாவில் இருந்து செலுத்தப்பட்டது.
1988-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் தொலை தூரச் செயற்கைக் கோள் பெயர்: இன்சாட் 1 ஏ ஆகும்.
இந்தியாவின் முதல் முழு காலநிலை ஆய்வு செயற்கைக் கோள் டெட்ஸாட் (கல்பனா-1) ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து 19 செப்டம்பர் 2002-இல் செலுத்தப்பட்டது.
கல்விக்காக மட்டும் செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கைகோள் எஜுஸாட் 2004 செப்டம்பர் 20-ஆம் தேதி செலுத்தப்பட்டது.
கடல் ஆய்வுக்காக மட்டுமே செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஓஷன் ஸாட் 1
( ஐ.ஆர்.எஸ்.பி.4 ) பி.எஸ்.எல்.வி 2 ராக்கெட் மூலம் 1050 கிலோ கிராம் எடையுள்ள ஓடின் ஸாட் தரையிலிருந்து 720 கி.மீ உயரச் சுற்றுப் பாதையில் 1999 மே 26-ஆம் தேதி செலுத்தப்பட்டது.
ஏற்கெனவே செலுத்தப்பட்ட செயற்கைக் கோளைத் திரும்பப் பெறும் முயற்சியில் இந்தியாவின் முதல் சோதனை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2007 ஜனவரி 10-இல் அனுப்பப்பட்ட எஸ்.ஆர். ஈ 1 என்ற மீள் பயன்பாட்டு விண்வெளிப் பேழை ஜனவரி 22-இல் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.
பாரசூட்டின் உதவியோடு 550 கிலோ எடையுள்ள அந்தப் பேழை வங்காள விரிகுடாவில் விழுந்தது. நீரில் மூழ்கி விடாமல் மிதந்து கிடப்பதற்கான "ப்ளோடேஷன்' என்ற வசதி அதில் இருந்தது. மணிக்கு 29 ஆயிரம் கி.மீ வேகத்தில் பூமியின் வாயு மண்டலத்தில் நுழையும் போது எரிந்து போகாமல் தடுத்து கீழே விழச் செய்வதுதான் இதிலுள்ள சவால்.