ஞாயிறு கொண்டாட்டம்

ஏழைகளின் வங்கி

கிராமின் வங்கி பிணை வைப்பின்றி ஏழை எளியவர்களுக்கு கடன்கள் வழங்குவதற்கென தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிதியமைப்பாகும்.

ராஜேஷ்


கிராமின் வங்கி பிணை வைப்பின்றி ஏழை எளியவர்களுக்கு கடன்கள் வழங்குவதற்கென தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிதியமைப்பாகும்.

இதனை உருவாக்கியவர் முனைவர் யூனுஸ். ஏழை மக்களின் சமூக முன்னேற்றதிற்காக முன்னின்று உழைத்தமைக்காக கிராமின் வங்கிக்கும்,நிறுவனர் யூனுஸிற்கும் 2006- ஆண்டிற்கான சமாதானத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது . யூனுஸ் மனைவி ஜோப்ராவுடன் தன்னுடைய கிராமத்தில் மூங்கில் இருக்கைகள் செய்யும் ஒரு பெண்மணியுடன் பேச நேர்ந்தபோதே யூனுசுக்கு சிறுகடன் பற்றிய எண்ணம் உருவானது.

அப்பெண்மணி உள்ளூர் வட்டிக்காரரிடம் கடன் பெற்று மூங்கில் வாங்கி, இருக்கைகள் தயாரித்து,விற்ற பணத்தில் பெரும்பாலானதை கடன் கொடுத்தவருக்கு திருப்பித் தரவேண்டிய அவல நிலையை அறிந்தார்.

அவருக்கு எப்படியாவது உதவ முடியுமா என்று யோசித்திருக்கிறார். பின் அவரும், அவருடைய மாணவர்களும் கிராமத்தில் ஆய்வை மேற்கொண்டபோது அந்த பெண்மணி போலவே மொத்தம் 42 மூங்கில் கூடை முடைபவர்கள் அதே பிரச்னைக்கு உட்பட்டிருப்பதாக தெரியவர, அவர்கள் அனைவரும் செலுத்த
வேண்டிய தொகையை அவர்கள் சார்பில் யூனுஸ் பணம் செலுத்தினார்.

பிறகு அவர்கள் அனைவரும் அவருக்கு அந்த தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டனர். இச்சம்பவமே ஏழைகளுக்கு கடனுதவி செய்யும் திட்டத்தை மேற்கொள்ள காரணமாக இருந்தது.சட்டப்படியான வங்கி அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. இதன் மூலம் ஏழைகள் பலர் பயனைடைந்து இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

SCROLL FOR NEXT