முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இயக்குநர்களின் நடிகர் 

"வனம்'  படத்தின் மூலம் மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் நடிகர் வெற்றி.  "8 தோட்டாக்கள்', "ஜீ.வி', " கேர் ஆப்  காதல்' போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த வேடங்கள் வித்தியாசமாகவும், தனித்துவமாக

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

"வனம்'  படத்தின் மூலம் மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் நடிகர் வெற்றி.  "8 தோட்டாக்கள்', "ஜீ.வி', " கேர் ஆப்  காதல்' போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த வேடங்கள் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து இப்போது "வனம்' படத்திலும் தனது முத்திரையைப் பதிவு செய்திருக்கிறார். "மாநாடு', "ராஜவம்சம்' போன்ற பெரிய படங்களுடன் வெற்றி நடித்த "வனம்' படமும் வெளியாகி ரசிகர்களிடமும், சினிமா விமர்சகர்களிடம் வரவேற்பு பெற்றள்ளது.

"வனம்' பட அனுபவம் குறித்து நடிகர் வெற்றி கூறும்போது..."வனம்' படத்தில் சிற்பக்கலை மாணவனாக நடித்தது புது அனுபவமாக இருந்தது. புகழ்பெற்ற கவின் கல்லூரியில் படப்பிடிப்பு நடந்தது. 1980-க்கு பிறகு அங்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிறப்பு அனுமதியுடன் எங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்றது. "வனம்' படம் பார்த்துவிட்டு பலரும் பாராட்டுகின்றனர். இந்த பெருமை எல்லாம் என்னுடைய இயக்குநர்களுக்குத்தான் போய் சேரும்.  என்னுடைய இயக்குநர்கள்தான் எல்லோரும் ரசிக்கும்விதமாக மக்கள் முன் என்னை கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். அந்த வகையில் ஒரு இயக்குநரின் நடிகராகவே என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன்.  பாலா, அமீர், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க விருப்பம். "மெமரீஸ்', "ஜோதி' ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.  அத்துடன் "ஜீ.வி' இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன். இந்தப் படத்தை "மாநாடு' சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்'' என்றார் வெற்றி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments