ஞாயிறு கொண்டாட்டம்

பாடலை மாற்றிய  பட்டுக்கோட்டையார்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு முறை தஞ்சாவூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

ஆர்.கே. லிங்கேசன்


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு முறை தஞ்சாவூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரயிலில் பிச்சை கேட்க வந்த நபர் ராகம் போட்டு சித்தர் பாடலை பாடிக் கொண்டிருந்தார். அதனை  ரசித்த பட்டுக்கோட்டையார் அந்த பிச்சைக்காரரை அழைத்து, "மிக நன்றாக சித்தர் பாட்டினை பாடினீர்' என பாராட்டி விட்டு ஒரு ரூபாயை அவருக்கு அன்பளிப்பு அளித்து விட்டு சொன்னார்.

"தோழரே சித்தர் பாடல் ஒன்றை பாடும் போது காயமே இது பொய்யடா? வெறும் காற்றடைத்த பையடா? என் பாடினீர்கள். அந்த கதையெல்லாம் இனிமேல் உதவாது. அடுத்த தடவை பாடும் போது காயமே இது மெய்யடா, அதில் கண்ணும் கருத்தும் வையடா என்று பாடுங்கள்' என்ற சொல்ல, அந்தப் பிச்சைக்காரர் அப்போதே பட்டுக்கோட்டையார் சொன்னது போல பாட ஆரம்பித்துவிட்டாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT