இசையிலிருந்து படத் தயாரிப்பு
பல்வேறு இசை ஆல்பங்களுக்கு இசையமைத்து பரவலான கவனம் பெற்றுள்ளார் வி. ஆர். ராஜேஷ். தற்போது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
பல்வேறு இசை ஆல்பங்களுக்கு இசையமைத்து பரவலான கவனம் பெற்றுள்ளார் வி. ஆர். ராஜேஷ். தற்போது ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது பட தயாரிப்பாளராகவும் வலம் வரும் வி.ஆர்.ராஜேஷ், டிஸ்கவர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் படத்தை தயாரிக்கிறார்.
யோகி பாபு மற்றும் நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரை வைத்து படம் ஒன்றை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை வெள்ளித்திரையில் பார்க்கலாம். இசையமைப்பாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்தாலும் தற்போது 3500 மேடை மெல்லிசை கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கியுள்ளார்.
Advertisement
இது குறித்து பேசும் போது.."" சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால், வாயைத் திறந்து, கண்கள் சிவந்து கேள்வி கேட்டால் அங்கே தான் பிரச்னை ஆரம்பம். அப்படி ஒரு கட்டத்தை எல்லோரும் தாண்டி வந்திருக்கிறோம். அதனால்தான் கிடைத்ததை கொண்டு சில உதவிகள் செய்தேன். அடுத்து குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிற கதைகள்தான் என் தயாரிப்பில் வரும். அதை எனக்கான, நமக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்துவேன்'' என்றார்.