ஞாயிறு கொண்டாட்டம்

என்ன... இரண்டாவது விருந்தா?

அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இந்தியா வந்த நேரம்.   அன்று இரவு 10 மணிக்கு அப்துல் கலாமை அலுவலகரீதியான விருந்துக்கு அழைத்தார். 

டி காளியப்பன்

அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இந்தியா வந்த நேரம்.  அன்று இரவு 10 மணிக்கு அப்துல் கலாமை அலுவலகரீதியான விருந்துக்கு அழைத்தார். 

'இப்பதான் என் உத்தியோக ரீதியிலான விருந்திலிருந்து சொந்த வீட்டுக்கு வந்திருக்கேன்.  உடையெல்லாம் மாற்றிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்திருக்கேன்''  என்றார் அப்துல் கலாம். ஆனால் அவர் செல்லவில்லை.

'என்ன சார். இரண்டாவது விருந்தா?'' என்று உதவியாளர்கள் கேட்டனர். 

இதற்கு அப்துல் கலாம், 'ஒன்றுமில்லை. அந்த உத்தியோக ரீதியான விருந்தில் நான் சும்மா சூப் உறிஞ்சிக்கிட்டே இருப்பேன்.  பசி ஒரு பக்கம். ஆனால் அந்த உணவு ஒண்ணும் எனக்குப் பிடிக்காது. இப்போ ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்'' என்று கூறி, சாப்பிடத் தொடங்கினார். 

கிளிண்டனுடன்..:  அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவுக்கு வந்த நேரம்.  ஓர் இரவு இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டார் அப்துல் கலாம். கிளிண்டனிடம் சில சில முக்கிய விஷயங்களைப் பேச சி.டி,யும், காணொலிகளையும் கொண்டு சென்றார் கலாம்.

அப்துல் கலாம் நினைத்தபடியே மடிக்கணினியில் கிளிண்டனுக்கு காட்ட முடியவில்லை. இருப்பினும், தான் கொண்டு வந்தவற்றை கிளிண்டனிடம் கொடுத்தார்.

கிளிண்டன் அப்துல் கலாமிடம் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து கலாம் கூறியதாவது:

'கிளிண்டன் அமெரிக்க அதிபரான நேரத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தது.  கிளிண்டன் வந்தவுடன் அமெரிக்காவில் உள்ள பழைய நெடுஞ்சாலைகள், சாலைகள் முதலியவற்றை புதுப்பிக்க நிதி அளித்தார்.  

மற்ற வகையிலும் வேகமாகச் செயல்பட்டார். அதனால், கீழ்நிலைப் பொருளாதாரச் சூழலில் இருந்த அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமானது.

அமெரிக்க அதிபருக்கு நிறைய அதிகாரங்கள் இருக்கின்றன. இருந்தாலும், காங்கிரஸ் சபை, செனட் சபை தவிர, ஜனநாயகக் கட்சியினரிடமும் ஆதரவு இருக்க வேண்டும். அதிபருடைய திட்டங்களை ஏற்கச் செய்ய தந்திரங்கள் சிவவற்றை உபயோகிக்க வேண்டும். 

ஒரே அறிக்கையில்  பல செயல்திட்டங்கள் இருந்தாலும்,  ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் கிளிண்டன் கொண்டு செல்ல மாட்டார். ஒரே நேரத்தில் ஒன்றைதான் அனுமதிக்கச் செய்வார்.  இதுவே கிளிண்டனுடைய வெற்றி மந்திரம்,. இதையே நாமும் செய்ய வேண்டும்'' என்றார் அப்துல் கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

காஞ்சிபுரத்தில் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சுரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT