சித்தரிக்கப்பட்டது 
ஞாயிறு கொண்டாட்டம்

சோதனை மேல் சோதனை...!

ஒரு அதிகாலை நேரம்.

எம். அசோக்ராஜா

ஒரு அதிகாலை நேரம்.

கணவன் மனைவியை எழுப்பி, 'டியர்... யோகா பண்ணப் போறேன்.. நீயும் வர்றியா?'' என்று கேட்டான்.

கணவனை வித்தியாசமாக பார்த்த மனைவி , 'ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன். உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படி தானே?'' என்றாள்.

இதற்குப் பின்னர் இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்.

'அதுக்கில்லைம்மா.. யோகா பண்றது உடம்புக்கு நல்லது...''

'அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?''

'இல்லை... இல்லை.. நீ வரவேணாம். விடு..''

'அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க?''

'ஐயோ இல்லை.. ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிறீங்க?''

'இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?''

'மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை..''

'அப்படிதான் சொன்னீங்க.. அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?''

'தயவு செஞ்சு விடு.. காலங்காத்தால ஏன் சண்டை?''

'ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்..''

' நானும் போகலை. போதுமா?''

'உங்களுக்கு போக அலுப்பு.. அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க?''

'சரி, நீ தூங்கு.. நான் தனியா போய்க்கிறேன்.. சந்தோஷமா?''

'அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் பண்ணனும்.. அதுக்கு தானே இவ்வளவும் பேசுனீங்க?''

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை. வேதனையுடன் தூங்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம்

வீடு புகுந்து தங்க நகைகளைப் பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஆதாரை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்கலாம்: தோ்தல் ஆணையம்

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்: விவசாயிகள் புகாா்

மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT