சமுத்திரக்கனியின் ராமம் ராகவம்
சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் படம் "ராமம் ராகவம்'. ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ருத்வி போலவரபு இப்படத்தை தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் படம் "ராமம் ராகவம்'. ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ருத்வி போலவரபு இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, இருமொழி திரைப்படமாக இயக்குவதோடு சமுத்திரக்கனியோடு இணைந்து நடிக்கவும் செய்கிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும்.
எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாகத்தான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம். தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது கதை நகருவதற்கான ஒரு வழிதான்.
அதைத்தாண்டி இந்த வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிக்கல்கள் இருந்தாலும், எல்லோருமே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம் என சொல்லப் போகிறேன். போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானூடத்தின் நிரந்தரம்.
Advertisement
அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்..'' என்றார் இயக்குநர். ஹைதராபாத், ராஜமந்திரி சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்..'' என்றார் இயக்குநர்.