தபால் அட்டை...
தபால் அட்டையின் வரலாறு: ஆஸ்திரியாவில் தொடங்கி, இந்தியாவில் 140 ஆண்டுகள்
Updated On : 6 ஜூலை, 2024 at 9:56 PM
ஆஸ்திரிய நாட்டுப் பேராசிரியரால் "கரஸ்பாண்டிங் கார்டே' என்று சொல்லப்பட்டதுதான் தபால் அட்டை. அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தபோது, 'போஸ்டல் கார்டு' என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது சுருங்கி "போஸ்ட் கார்டு' ஆனது.
1870-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன்முதலாக, தபால் அட்டை வெளியிடப்பட்டபோது அதை வாங்க அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இந்தியாவில் தபால் அட்டை புழக்கத்தில் வந்து, 140 ஆண்டுகள் ஆகின்றன.