முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இந்தியன் 2 விழாவில் கமல்

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் உரை

Updated On : 8 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள "இந்தியன் -2' வரும் ஜூன் 12-ஆம் தேதி திரை காணவிருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ""இது நீளமான கதை. எங்கிருந்து ஆரம்பிக்கிற கதை என்று தெரியவில்லை. ஷங்கர் அடைந்திருக்கும் இந்த உயரம் அதிர்ஷ்டம், விபத்து அல்ல. அன்று பார்த்த அதே துடிப்புடன் இன்றும் இருக்கிறார். அவர் முதன் முதலில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு என்னிட் வந்தார். அப்போது எனக்கு அந்த சித்தாந்தத்தில் உடன்பாடு இல்லை என்பதால் நடிக்கவில்லை. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதன் பின்னும் ஷங்கர் என்னிடம் வந்தார். அப்போது நான் சிவாஜியை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன்.

அப்போது அதே மாதிரியான கதையைதான் ஷங்கர் சொன்னார். அப்போது நான் சிவாஜி ஐயாவிடம் இதைப் பற்றி சொல்லும்போது அவரும் நீ சொன்ன கதையில் நீ மகன் நான் அப்பா, இதில் அப்பாவும் மகனும் நீதான். இந்தக் கதையில் நடி என்று சொன்னார். என் வயதை விட 15 வயசுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவில் நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம். இந்த விழாவில் இதை ஏன் பேசுனீங்கனு கேட்பாங்க. எந்த விழாவிலும் பேசுவேன். இந்த நாட்டின் ஒற்றுமையை நாம் காக்க வேண்டும். அதைதான் இந்தப் படம் உணர்த்துகிறது'' என்றார் கமல்.

முழு கட்டுரையைப் படிக்க →