முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இந்தியத் திரைப்படத்தின்...

ஒலிம்பிக்ஸ் விளம்பரத்தில் 'கீதா கோவிந்தம்' பாடல் பல்லவி: வைரலாகும் காணொளி

Updated On : 23 ஜூன், 2024 at 12:00 AM
பகிர்:

அதிகாரபூர்வ ஒலிம்பிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரிஸில் ஜூலையில் நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் குறித்தான விளம்பரக் காணொளியில் "கீதா கோவிந்தம்' தெலுங்கு திரைப்படத்தின் "இன்கெம் இன்கெம்.. இன்கெம் காவாலா' பாடலின் பல்லவியை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையறிந்த படத்தின் நாயகனாக நடித்திருந்த விஜய் தேவரகொண்டா அந்தக் காணொளியை பகிர்ந்துள்ளார். பதினெந்து விநாடிகள் ஓடும் அந்தக் காணொளி வைரல் ஆகியுள்ளது.

காணொளியில் ஈபிள் கோபுரம் ஒலிம்பிக் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டு, "கீதா கோவிந்தம்" படத்தின் "இன்கெம் இன்கெம்" பல்லவியுடன், டிரேக்கின் "ஹாட்லைன் பிளிங்" இசையும் பின்னணியில் ஒலிக்கிறது.

Advertisement

ஒலிம்பிக்ஸ் விளம்பரக் காணொளியில் இந்தியப்படத்தின் பாடலின் பல்லவி இடம் பிடித்திருப்பது பாடலின் வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.