முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

காமராஜரின் நேர்மை...!

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக, காங்கிரஸ் தலைவராக இருந்தபோது மட்டுமல்ல; இளம்வயதிலேயே நேர்மையாக இருந்துள்ளார்.

Updated On : 10 நவம்பர், 2024 at 1:47 PM
பெருந்தலைவர் காமராஜர்
பகிர்:
Updated On : 10 நவம்பர், 2024 at 1:45 PM

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக, காங்கிரஸ் தலைவராக இருந்தபோது மட்டுமல்ல; இளம்வயதிலேயே நேர்மையாக இருந்துள்ளார். அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவமே அதற்கு சான்று ஒன்று:

நாட்டாமைக்காரர் ஜவுளிக்கடையில், தனது இளம் வயதில் காமராஜர் வேலை பார்த்தார். இரவு எட்டு மணி. அப்போது அம்மணி அம்மாள் எனும் பெண்மணி ஒருவர் தன் மகள் தமயந்திக்கு பாவாடை தைக்கத் துணி வாங்கினார். சீட்டித் துணி பூப் போட்டது. ஐந்து ரூபாய் நோட்டை கொடுத்து மீதிச் சில்லறை வாங்கிக் கொண்டு தெற்கு ரத வீதியை நோக்கிச் சென்றார்.

திடீரென பின்னால் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு அம்மணி அம்மாள் திரும்பிப் பார்த்தபோது, காமராஜர் ஓடி வந்துகொண்டிருந்தார்.

Advertisement

'ஏன் தம்பி.. இப்படி ஓடி வந்தே?'

Updated On : 10 நவம்பர், 2024 at 1:46 PM

'ஓர் அணாவைக் கடையிலேயே கீழே போட்டுவிட்டு வந்திட்டிங்க? அதைக் கொடுக்கத்தான் ஓடி வந்தேன்' என்று காமராஜர் ஓர் அணாவை அம்மணி அம்மாளிடம் கொடுத்தார்.

இதைப் பெற்ற அம்மணி அம்மாள் மகிழ்ந்தும் வியந்தும், 'சங்கிலி கருப்புசாமி.. ராசாவுக்கு நீ என்னைக்கும் பக்கபலமாய் இருக்கணும்..' என்று கைகூப்பி வணங்கினார்.

மறுநாள் ஒரு கூடை நிறைய கொடுக்காய்ப் புளிப் பழங்களைக் கொண்டு வந்து காமராஜரிடம் கொடுத்துவிட்டு, நேர்மையைப் பாராட்டிவிட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.