ஞாயிறு கொண்டாட்டம்

மீண்டும் இணையும் கூட்டணி

கடந்த ஆண்டு ஹீரோவாக 'அந்தகன்', விஜயின் நண்பராக 'தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என இரண்டு படங்கள் பிரசாந்துக்கு வெளியாகின.

DIN

கடந்த ஆண்டு ஹீரோவாக 'அந்தகன்', விஜயின் நண்பராக 'தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என இரண்டு படங்கள் பிரசாந்துக்கு வெளியாகின. அதிலும் விஜய் படத்தில் அவரது நடனம் பேசப்பட்டது. 'அந்தகன்' படத்தில் நடிப்பில் மிளிர்ந்தார்.

'அந்தகன்' படம் ஆகஸ்ட்டில் வெளியானாலும், இப்போது ஓடிடியில் பார்வையாளர்களை அள்ளி வருகிறது. ரீமேக் படமான இதில் காட்சியமைப்புகளில் பெரிதாய் மாற்றம் செய்யாமல், தமிழ்ச் சூழலுக்குத் தகுந்த திரைக்கதை ஆக்கம், அழகான வசனங்களில் கவனிக்க வைத்தார் இயக்குநர் தியாகராஜன்.

இந்நிலையில், பிரசாந்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இயக்குநர் ஹரி இரண்டாவது முறையாக பிரசாந்தை இயக்கப் போகிறார்.

கடந்த ஏப்ரல் 6'ஆம் தேதி பிரசாந்தின் பிறந்த நாளில் இந்த அறிவிப்பு வெளிவந்தது. இது பிரசாந்த்தின் 55 'ஆவது படமாகும். இந்த படத்தை பிரசாந்த் நடித்த 'தமிழ்' படத்தின் மூலம் தான் ஹரி இயக்குநராக அறிமுகம் ஆனார். இப்போது இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

பிரசாந்தின் 55-ஆவது படத்தில் சாய்பல்லவி, கயாடு லோஹர், பூஜா ஹெக்டே என பலரது பெயர்கள் பரிசிலீக்கப்பட்டு வருகிறது. 'தமிழ்' படத்தில் சிம்ரன் ஜோடியாக நடித்தது போல, ஹரி ' பிரசாந்த் கூட்டணி படத்திலும் முன்னணி ஹீரோயின் இணையலாம் என்ற பேச்சு இருக்கிறது. இந்தாண்டு இரண்டு படங்கள் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறார் பிரசாந்த். அதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT