தஞ்சைக்கென தனி பாடல்
தரணிக்கே சோறூட்டிய தஞ்சை மண்ணின் பெருமை பேசும் 'தங்கமான தஞ்சாவூரு...' என்ற தனிப் பாடலை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் அந்தோணிதாசன்.
தரணிக்கே சோறூட்டிய தஞ்சை மண்ணின் பெருமை பேசும் 'தங்கமான தஞ்சாவூரு...' என்ற தனிப் பாடலை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் அந்தோணிதாசன். இந்த புது முயற்சி குறித்து அவர் பேசும் போது.... ""இந்தப் புத்தாண்டின் தொடக்கமே எனக்கு இரட்டை சந்தோசத்தில் தொடங்கி இருக்கிறது. விடாமுயற்சியில் "சவதிகா' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது முதல் சந்தோசம் என்றால், "தங்கமான தஞ்சாவூரு...' பாடல் அடுத்த சந்தோஷம்.
நான் இதுவரை எத்தனையோ ஊர்களுக்கு ஆல்பம் பாடி இருக்கிறேன். ஆனால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தஞ்சை மண்ணுக்கென இதுவரை ஒரு ஆல்பம் இல்லையே என்ற ஏக்கம் ரொம்ப நாளாக என் மனதில் இருந்தது.
அதனால் அந்தப் பொறுப்பை நானே எடுத்துக்கொண்டு தஞ்சைக்கென ஒரு ஆல்பம் செய்யலாம் என முடிவெடுத்தேன். என் ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளவே "தங்கமான தஞ்சாவூரு...' பாடலை உருவாக்கினேன். பாடல் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. பாடல் வரிகளை பாடலாசிரியர் லாவரதன் எழுதி இருக்கிறார்.
Advertisement
அவரும் என்னைப் போலவே தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அந்தப் பகுதி நிலம், வயக்காடு எல்லாம் அப்போது இருந்த மாதிரி இப்ப இல்லை. இப்போது எல்லாம் வேலி போட்டு, பிளாட் போட்டு வீடு கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்க்கும் போது, அந்த வயல்வெளியே இருக்காது. இந்த இடம் கொஞ்ச வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது என்று அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு தெரிய வைக்கிற ஒரு பதிவாகத்தான் இதை நான் நினைக்கிறேன்'' என்றார்.