ஞாயிறு கொண்டாட்டம்

இலங்கையில் உயர்தர ஸ்டூடியோ

இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் 'ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ்' என்ற பெயரில் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் 'ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ்' என்ற பெயரில் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் கூடிய இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் அமீர், 'லப்பர் பந்து' கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்ட தமிழ்த் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பங்கு பெறும் நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன.

திரைப்படங்களை எடுப்பதற்கான நவீன தரத்திலான ஏரி அலெக்ஸா. அபெச்சர் உள்ளிட்ட உயர்தர ஒளி அமைக்கும் யூனிட் ஒன்றையும் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர்.

ஒரு திரைப்படம் எடுப்பதற்கான தயாரிப்பு வசதிகள் முதல் விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டூடியோ, ஒலிக் கலவை என அனைத்தையுமே ஓரிடத்தில் பெறுவதற்கான வசதிகள் இங்கே உள்ளன.

இந்த விழாவில் இலங்கைத் தமிழ் கலைஞர்களாக 'வெந்து தணிந்தது காடு' பட இயக்குநர் மதிசுதா, 'சரிகம' புகழ் கில்மிஷா, இசையமைப்பாளர்கள் பத்மயன், பூவன் மதீசன், முரளி, ஒளிப்பதிவாளர்கள் ஏ.கே. கமல், ரிஷி செல்வம், ரெஜி செல்வராசா, படத்தொகுப்பாளர் அஞ்சலோ ஜோன்ஸ், துஷிகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் மாபெரும் நிகழ்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் இந்த வருடத்திற்கான 5 முழுநீளத் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான ஆரம்ப நிகழ்வும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT