பெண்கள் பலரும் எடை குறைய பல முயற்சிகளைச் செய்கின்றனர். சிலர் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். உடற்பயிற்சிக் கூடங்களுக்கும் செல்கின்றனர். நடைபயிற்சியையும் மேற்கொள்கின்றனர். மருந்துகளும் வந்து விட்டன. எடை குறைப்புக்கு சில குளிர்பானங்களைச் சாப்பிட்டாலே போதும்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் நார்சத்து உள்ளது. உடலில் கெட்ட கொழுப்புகளை அகற்றுவதால், எடை குறைப்புக்கு வாய்ப்பு அதிகம். ரத்த ஓட்டமும் சீராகும். செரிமானத்துக்கும் உதவும்.
பாகற்காய் ஜூஸ்
சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன் உடல் கழிவுகளை அகற்றுவதிலும் உதவும். வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
காரட் ஜூஸ்
ஊட்டச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. காரட் ஜுஸ் குடித்தால் வயிறு நிரம்பி விட்ட உணர்வைத் தரும். இதனால் வழக்கமான அளவைவிட குறைத்துச் சாப்பிடுவோம். நார் சத்து உள்ளதால் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி, உடல் எடை குறைப்புக்கு உதவும்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
கோடைகாலத்தில் உடலில் நீர் தேவையை அதிகரிக்கும் அருமருந்து. தினமும் குடித்து வந்தால் எடை குறையும். கொழுப்பை குறைக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்ஸýம் உளளன.
தக்காளி ஜூஸ்
வெறும் வயிற்றில் தக்காளி ஜுஸ் தினமும் சாப்பிட்டாலே எடை குறைந்து விடும். வயிறு சுத்தமாவதுடன், மலச்சிக்கலையும் அகற்றும். குடல் செயல்பாடு கூடுவதோடு, உடல் எடையும் குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.