ஞாயிறு கொண்டாட்டம்

12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...

ஜப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.

சக்ரவர்த்தி

ஜப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார். இதன் உச்சியில் ஏறிய மிகவும் வயதானவர் என்பதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். 'ஆர்வம், விடாமுயற்சி, மன உறுதி இருந்தால் 102 வயதிலும் சாதனை புரியலாம்' என்பதற்கு அவர் உதாரணம்.

ஆகஸ்ட் 5-இல் 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி சிகரத்தை மூன்று நாள் மலையேற்றத்துக்குப் பின்னர் அடைந்தார். உச்சியில் உள்ள முகாமில் இரண்டு இரவுகள் தங்கியிருந்தவுடன் மலையிலிருந்து இறங்கினார். முன்னதாக, அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது 96 வயதில் ஃபுஜி மலை உச்சிவரை சென்று சாதனை புரிந்தார்.

அவர் கூறியது:

''அப்போது மலை ஏறுவதைவிட 102 வயதில் மலை ஏறுவது மிகவும் கடினமான சவாலாக அமைந்திருந்தது. நான் முன்பு இவ்வளவு பலவீனமாக உணர்ந்ததில்லை. 102 வயதில் மலை ஏறுவது சிரமமான முயற்சிதான் என்பது முதுமையில் உடல்ரீதியாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். உடன் வந்தவர்கள் தந்த உற்சாகம் என்னை அலுப்பு சிரமம் பாராமல் மலை உச்சியைச் தொடச் செய்தது.

ஃபுஜி மலை ஏறும் முன், பயிற்சிக்காக அதிகாலையில் நீண்ட நடைப்பயணங்களை மேற்கொண்டேன். சிறு மலைகளில் ஏறி பயிற்சி செய்தேன். எனது 70 வயது மகள், பேத்தி, பேத்தியின் கணவர், உள்ளூர் மலையேறும் அமைப்பின் நான்கு உறுப்பினர்களுடன் மலையேறினேன். உடல் உபாதையால், பாதியில் மலை ஏறுவதை நிறுத்திவிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். ஆனால் உடன் வந்தவர்கள் தந்த உற்சாகத்திலும், ஊக்கத்தாலும் மலை உச்சியைத் தொட்டுவிட்டேன்'' என்கிறார் கோகிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT