தமிழ்மணி

நிகண்டுகள்

நிகண்டுகள் என்பவை இன்றைய அகராதி போன்றவை. ஒரு பொருளுக்குப் பல சொற்களும், ஒரு சொல் பல பொருளும் செய்யுளாக இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும். திவாகர நிகண்டு: காலம் 8-ஆம் நூற்றாண்டு. இதை இயற்றியவர் திவாகர மு

தினமணி

நிகண்டுகள் என்பவை இன்றைய அகராதி போன்றவை. ஒரு பொருளுக்குப் பல சொற்களும், ஒரு சொல் பல பொருளும் செய்யுளாக இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும்.

திவாகர நிகண்டு: காலம் 8-ஆம் நூற்றாண்டு. இதை இயற்றியவர் திவாகர முனிவர். இது 10 தொகுதிகளையும், 9500 சொற்களையும் உடையது. சேந்தன் ஆதரவில் வாழ்ந்தவர் திவாகரன். இதனால் இது சேந்தன் திவாகர நிகண்டு என்றும் அழைக்கப்படுகிறது.

பிங்கல நிகண்டு: இதன் ஆசிரியர் பிங்கல முனிவர். திவாகர முனிவரின் மகன். இந்நிகண்டு 10 தொகுதிகளையும் 15791 சொற்களையும் உடையது.

உரிச்சொல் நிகண்டு: இதன் ஆசிரியர் காங்கேயர். காலம் 14-ஆம் நூற்றாண்டு. 12 தொகுதிகளையும் 3200 சொற்களையும் உடையது.

சூடாமணி நிகண்டு: இதன் ஆசிரியர் மண்டல புருடர். (வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்படுவார்). இதன் காலம்

16-ஆம் நூற்றாண்டு. இது 12 தொகுதிகளை உடையது. 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களை உடையது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’

‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’

கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT