தமிழ்மணி

தலைமக்கட்கு உரிய குணங்கள்

தலைமகனுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன.

தினமணி

தலைமகனுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன.

அறிவு :

எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு.

நிறை :

காப்பன காத்து கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்.

ஓர்ப்பு :

ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல்.

கடைப்பிடி :

கொண்ட பொருள் மறவாமை.

தலைமகளுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன.

அச்சம் :

பெண்மையின் தான் காணப்படாததொரு பொருள் கண்டவிடத்து அஞ்சுவது.

மடம் :

கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.

நாணம் :

பெண்டிர்க்கு இயல்பாக உள்ளதொரு தன்மை.

பயிர்ப்பு :

பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT