தமிழ்மணி

திருக்குறள் ஓர் இட்டளி!

காவியா புகழேந்தி


வேட்டி யாருக்கு வேண்டும்?
அப்பாவுக்கு!
புடவை யாருக்கு வேண்டும்?
அம்மாவுக்கு!
இட்டளி யாருக்கு வேண்டும்?
அப்பா, அம்மா, குழந்தைகள் உள்ளிட்ட 
அனைவருக்குமே!
பைபிள் யாருக்கு உரியது?
கிறித்தவர்களுக்கு!
குரான் யாருக்கு உரியது?
இசுலாமியர்க்கு!
இராமாயணம், மகாபாரதம் யாருக்கு உரியது?
இந்துக்களுக்கு!
நாலாயிர திவ்யப் பிரபந்தம் யாருக்கு உரியது?
வைணவர்களுக்கு!
தேவாரம், திருவாசகம் யாருக்கு உரியது?
சைவர்களுக்கு!
திருவருட்பா யாருக்கு உரியது?
சமரச சுத்த சன்மார்க்கிகளுக்கு!
திரிபீடகம் யாருக்கு உரியது?
பெளத்தர்களுக்கு!
சீவகசிந்தாமணி, சூளாமணி 
யாருக்கு உரியது?
சமணர்களுக்கு!
திருக்குறள் யாருக்கு உரியது?
கிறித்தவர்கள், இசுலாமியர்கள், 
இந்துக்கள், சைவர்கள், வைணவர்கள்,
சமரச சுத்த சன்மார்க்கிகள் உள்ளிட்ட
அனைவருக்குமே!  ஆம்.
திருக்குறள் ஓர் இட்டளி!
இட்டளி -அனைவருக்குமே வேண்டிய
பொது உணவாகும்.
குறிப்பு: இட்டு அவிப்பது இட்டவி ஆயிற்று. 
இட்டு அளிப்பது இட்டளி ஆயிற்று. இட்லி, இட்டிலி, இட்டலி என்பன தவறான சொல் வடிவங்கள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா: ஒரு வாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக பதில்

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT