தமிழ்மணி

பழ​மொழி நானூறு முன்​று​றை​ய​ரை​ய​னார்

மூங்​கி​லை​யொத்த தோள்​க​ளை​யு​டை​யாய்!  மிக​வும் மாறு​பாடு கொண்டு,  முற்​பட்​டுத் தம்மை நலிய எழுந்​த​வர்​களை பின்​னர் ஒரு​கா​லத்து அவரை வருத்த

தினமணி


​ப​கை​வரை முன்​னரே அறிந்து களை​க!​

​முன்​ன​லிந் தாற்ற முரண்​கொண் டெழுந்​தோ​ரைப்
பின்​ன​லிது மென்​றி​ருத்​தல் பேதை​மையே - பின்​சென்​று​
​காம்​பன்ன தோளி கடி​திற் கடித்​தோ​டும் 
பாம்​பின்​பல் கொள்​வாரோ இல்.  (பாடல்-148)

மூங்​கி​லை​யொத்த தோள்​க​ளை​யு​டை​யாய்!  மிக​வும் மாறு​பாடு கொண்டு,  முற்​பட்​டுத் தம்மை நலிய எழுந்​த​வர்​களை பின்​னர் ஒரு​கா​லத்து அவரை வருத்த மாட்டு​வேம் என்று சோம்பி இருத்​தல் அறி​யா​மை​யே​யாம். விரைந்து கடித்து ஓடு​கின்ற பாம்​பி​னது நச்​சுப்​பல்லை அதன் பின் சென்று  கொள்​வார் ஒரு​வ​ரு​மி​ல​ரா​த​லின். (க-து.) பகை​வரை அவர் மாறு​பட்டு எழு​வ​தற்கு முன்​னரே அறிந்து களைக என்​றது இது.  "​க​டி​திற் கடித்​தோ​டும்​பாம்​பின்​பல் கொள்​வாரோ இல்'​ என்​பது ப​ழ​மொ​ழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT