தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்?
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரால்
கானகத்து உக்க நிலா (பாடல்- 210)


மான்போன்ற மருட்சியான கண்களை உடையவளே! உள்ளத்தாலே ஒருவரை சிநேகித்து, நண்பர் என்று நாம் பழகிவரும் காலத்து, அவர்  உள்ளத்திலே நாணம் இல்லாமல், நல்ல முறையிலே நம்மிடத்து நடவாமலிருந்தார் என்றால், அதனால் என்ன? காட்டில் எரிந்த (ஒளி வீசிய) நிலவைப் போன்று பயனற்ற அந்த நட்புக்காக சான்றோர் மறந்தும் வருத்தப்பட மாட்டார். அந்த நட்பை உடனே கைவிட்டு விடுவர். "கானகத்து உக்க நிலா' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT