தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டுநடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்அடும்பார் அணிகானற் சேர்ப்ப! - கெடுமே

தினமணி


நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப! - கெடுமே
கொடும்பாடு உடையான் குடி. (பாடல்-194)

அடும்பின் (அடப்பம்) கொடிகளும் பூக்களும் நிறைந்து அழகு செய்து கொண்டிருக்கும் கடற்கரைச் சோலைகளுக்கு உரியவனே! நெடுங்காலமாகவே தம்மோடு தொடர்பு கொண்டு  வந்தவர்கள், தீய தன்மையிலே இருப்பதைக் கண்டு, பெரியோர்கள் தம் உள்ளம் நடுக்கமுற்றுப் பெரிதும் வருந்துவார்கள். அவர்கள் வருந்தியதும் கொடுஞ்செயலை உடைய அவனுடைய குடும்பமே அழிந்து போகும். சான்றோரின் மனம் வருந்துமாறு செய்வது ஒருவருடைய குடும்பத்தை வேருடன் அழித்துவிடும். "கெடுமே கொடும்பாடு உடையான் குடி' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT