கரும்பாட்டிக், கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கால் துயராண்டு உழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார், கூற்றம்
வருங்காற் பரிவது இலர்.
(பாடல் 35 அதிகாரம்: அறன் வலியுறுத்தல்)
கரும்பை ஆலையிலே வைத்து நசுக்கி வெல்லக் கட்டியினை முற்காலத்திலே எடுத்துக் கொண்டவர்கள், பின்னர் அதன் சக்கையாகிய துரும்பு நெருப்பிலே பொருந்தி வேகும்போது, அவ்விடத்தே அதைக் கண்டு, கொஞ்சமும் துயரப்பட மாட்டார்கள். அது போலவே, உடம்பினை இச்சைகளுக்கு ஆட்படாமல் வருத்தி, உடம்பினாலாகும் உண்மைப் பயனான அறநெறிகளைக் கைக்கொண்டவர்கள், கூற்றமானது தம்மீது வருகின்ற காலத்திலே, உடம்பை விடுவது குறித்து வருத்தம் அடையமாட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.