முகப்பு
தமிழ்மணி

இலக்கியங்களில் சுற்றுச்சூழல்

தாவரங்கள் மீது தமிழர்களின் பக்தியும், மதிப்பும் அளவிட முடியாதவை. அதனால்தான் கோயில்களில் தலவிருட்சம் என ஒரு மரத்தை நிர்ணயம் செய்து வழிவழியாக வழிபாடு செய்து வருகின்றனர்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:14 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:12 PM

உ.இராசமாணிக்கம்

தாவரங்கள் மீது தமிழர்களின் பக்தியும், மதிப்பும் அளவிட முடியாதவை. அதனால்தான் கோயில்களில் தலவிருட்சம் என ஒரு மரத்தை நிர்ணயம் செய்து வழிவழியாக வழிபாடு செய்து வருகின்றனர்.

வீடுகளில் துளசிச் செடி வைத்து வலம் வந்து வழிபடுகின்றனர்.

Advertisement

சுற்றுச்சூழலுக்கு அரணாகவும், சுற்றுச்சூழலை வைத்து ஒரு பருவம் வருவதைச் சொல்லக் கூடிய அளவுக்கு சங்க காலப் புலவர்களுக்கு ஞானம் இருந்தது. செழிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றின் குறியீடுகளாக மரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பருவகாலத்துக்கேற்றவாறு தாவரங்கள் வளர்ச்சியும் மாற்றமும் அடைவதை சங்கப் புலவர்கள்கூறியுள்ளார்கள். பனிக் காலத்தில் செருந்தியின் மொட்டு மலர்ந்த பேரழகை

'பின்னுவிட நெறித்த கூந்தலும்

------

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:13 PM

கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து (அக. -150)

என புலவர் குறுவழுதியார் குறிப்பிடுகிறார்.

சங்க கால மக்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். குறிஞ்சி நில மக்கள் மிகத் தாழ்வான சிறிய குடிசைகளை அமைத்தனர். தினைத் தாளையும், ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வாழ்ந்தார்கள். முல்லை நில மக்களோ குடில்களின் மீது வரகுத் தாள், கேழ்வரகுத் தாள்களை உரையின் மீது போட்டு குளிர வைத்தார்கள்.மேலும், வைக்கோல் கொண்டும் வேய்ந்தார்கள். அதற்கருகில், ஆடு- மாடுகளுக்கு இருப்பிட கொட்டகைகளை அமைத்தார்கள். இன்றளவும் சிறிய கிராமங்களில் இந்த வாழ்க்கை முறையைக் காணலாம்.

'படு நீர்ப் புணரியன் பரந்தபாடி

பரந்தபாடி குவலை கூரை ஒழுகிய தெருவில்'

(முல்லை 28 )

ஆடுகள் தின்னும் தழைகளையும் வரகு கற்றை

களாலே வேய்ந்த சேக்கையையும் கடாயினுடைய தோல்களைப் பாயாகவும் பயன்படுத்தி இயற்கை

யோடு ஒட்டி வாழ்ந்து தங்களைப் பாதுகாத்து

மகிழ்ச்சியோடு வாழ்ந்துள்ளனர்.

பகை நாட்டினர் ஒரு நாட்டின் வளமையைக் கெடுக்க பகையுணர்வு கொண்டு மருத நிலங்களையும்,

காடுகளையும் தீயிட்டு எரித்துள்ளனர். செயல்

பொருள் பயன்பாட்டுக்கும் போக்குவரத்துக்குப் பாதை வேண்டியும் தாவரங்களும் அழிக்கப்பட்டதை சங்க இலக்கியங்களான புறநானூறும் பட்டினப்

பாலையும், பதித்துப்பற்றும் சில பாடல்களில் பறைசாற்றுகின்றன.

'நிலம் தவ உருட்டிய நேமியோரும்

சமங் கண் கூடித்தாம் வேட்பவ்வே

-----

பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை

விழு நவி பாய்ந்த மரத்தின்

வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே'

(புறம். 270--12)

என தாவரங்களை அழித்தால் அடையும் தீமையை

சங்கப் புலவர்கள் உணர்திருந்தினர்.

சங்க கால மக்களும், மன்னர்களும் இயற்கையோடு ஒட்டி வாழ்வதிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் மிகுந்த அக்கறையோடு இருந்ததை பல சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கபிலர் குறிஞ்சிப்பாட்டில் 96 வகையான பூக்களைக் குறிப்பிட்டுள்ளார். எந்தப் பருவத்தில் எந்த மலர்பூக்கும் என்பதையும் சங்கப் புலவர்கள் கூறியுள்ளனர்.

ஓரறிவு படைத்த தாவரம் முதல் ஐந்தறிவு படைத்த ஆவினங்கள் வரை தேவையை ஆய்ந்தறிந்து சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் வராமல் எழுத்தறிவு அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் செம்மாந்த வாழ்வு வாழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.