உண்மைத் துறவியின் இலக்கணம்
ஒரு கேடுஞ் செய்யாத தம்மை, அறிவற்ற பேதை மாக்கள் இகழ்ந்தால், அதைத் தாம் பொறுத்துக் கொள்வதும் அல்லாமல், எம்மை இப்படி இகழ்ந்து பேசிய தீவினையின் பயனால், இவர்கள் மறுமையில் தீ நிரம்பிய நரகத்திலே வீழ்வார்களே?
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, மற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தான், - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!' என்று
Advertisement
Advertisement
பரிவதூஉம், சான்றோர் கடன்.
(பாடல் 58 அதிகாரம்: துறவு)
ஒரு கேடுஞ் செய்யாத தம்மை, அறிவற்ற பேதை மாக்கள் இகழ்ந்தால், அதைத் தாம் பொறுத்துக் கொள்வதும் அல்லாமல், எம்மை இப்படி இகழ்ந்து பேசிய தீவினையின் பயனால், இவர்கள் மறுமையில் தீ நிரம்பிய நரகத்திலே வீழ்வார்களே?' என்று, அவர்களுக்காக இரக்கப்படுவதும், துறவினால் சான்றாண்மை உடையவராக விளங்குபவரின் கடமையாகும்.
தமக்கு துன்பம் இழைத்தவருக்கும், அதனால் துன்பம் நேரிடக்கூடாது என்று எண்ணுகின்ற இரக்கம் உடைமையே உண்மைத் துறவியரின் இலக்கணம்' என்பது கருத்து.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.