வெள்ளிமணி

தங்க வாகனத்தில் சனீஸ்வரர்!

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சந்நிதியில் அருள்புரிகிறார் ஸ்ரீசனீஸ்வர பகவான்.  நள சக்கரவர்த்தி, தன்னைப் பிடித்திருந்த சனியிலிருந்து விடுபடுவதற்காக திருநள்ளாறு வந்தார். அங்குள்ள தீர்த்

செல்வமுத்துக்குமாரசாமி

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சந்நிதியில் அருள்புரிகிறார் ஸ்ரீசனீஸ்வர பகவான்.

 நள சக்கரவர்த்தி, தன்னைப் பிடித்திருந்த சனியிலிருந்து விடுபடுவதற்காக திருநள்ளாறு வந்தார். அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பிரதான தெய்வமாக அருள் பாலிக்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரரை வழிபட்டார். இதன்பின் சனி விலகியதாக வரலாறு. இந்தக் காரணத்தால் திருநள்ளாற்றில் உள்ள தீர்த்தத்துக்கு நள தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.

 உக்ர மூர்த்தியாகிய சனி பகவான் இக்கோயிலில் அனுக்ரக மூர்த்தியாக, கிழக்கு நோக்கி, அபய முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். சனி பகவானுக்கு காகமே வாகனம். இக்கோயிலில் தங்கக் காக வாகனம் உள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவின்போது ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் வீற்றிருந்தவாறு பக்தர்களுக்கு அருள் தருகிறார்.

 வருகிற டிச.21 காலை 7.51 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. தகவலுக்கு: 04368-236530.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT