உடனே பதில்!
வாழ்க்கையில் நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. எல்லாம் சூன்யமாக இருக்கிறது. ஆறுதல் பெற மனம் தவிக்கின்றது'' என்றெல்லாம் சிந்தித்து மனமுடைந்து போயிருப்பவர்களா நீங்கள்? எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைக
வாழ்க்கையில் நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. எல்லாம் சூன்யமாக இருக்கிறது. ஆறுதல் பெற மனம் தவிக்கின்றது'' என்றெல்லாம் சிந்தித்து மனமுடைந்து போயிருப்பவர்களா நீங்கள்? எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளாக இருந்தாலும், ஆறுதலாக ஓடிவந்து நம்மை அரவணைப்பது இறை வார்த்தை.
இறைவார்த்தைகளைச் சொல்லி உங்கள் வேண்டுதல்களை இறைவனிடம் சமர்ப்பியுங்கள்.
மனம் ஆறுதலை இழந்து தவிக்கும்போது: நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் (யோவான் 14:1).
தோல்விகளின் மத்தியில்: கேடு வரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார். தம் கூடாரத்தினுள் என்னை ஒளித்து வைப்பார். குன்றின் மேல் என்னைப் பாதுகாப்பாய் வைப்பார் (தி. பாடல்கள் 27:5).
ஆபத்துக்களைச் சந்திக்கும்போது: நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின் மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத்தாங்கிக் கொள்வர் (தி. பாடல்கள் 91:11-12).
மனக் குழப்பங்கள் பெருகும்போது: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ, நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் (மத் 6:25).
நம்பிக்கை இழக்கும்போது: நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அருகில் அவர் இருக்கிறார் என்பதையும் அவரை தேடிச் செல்வோருக்கு தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும் (எபி 11;6).
அமைதி கிடைக்க: நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத்:11:29).