மனபலம் தருவார்!
நீதியே அமைதியின் அடிப்படை. நீதி என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் உகந்த விதத்தில் நடப்பது. மனைவிக்கோ, கணவனுக்கோ, குழந்தைகளுக்கோ செய்ய வேண்டியதை செய்யாமல் எவ்வளவு செபித்தாலும் அமைதி கிடைக்காது. கடவுளுக்
நீதியே அமைதியின் அடிப்படை. நீதி என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் உகந்த விதத்தில் நடப்பது. மனைவிக்கோ, கணவனுக்கோ, குழந்தைகளுக்கோ செய்ய வேண்டியதை செய்யாமல் எவ்வளவு செபித்தாலும் அமைதி கிடைக்காது. கடவுளுக்கு கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்காமல், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஊரில் உள்ளவர்களுக்கும் என்ன கொடுத்தாலும் அங்கும் அமைதியின்மையே உருவாகும். ""அப்படியானால், சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கும் கொடுங்கள் (லூக் 20:25)''.
இறைவன் காட்டும் பாதைகள்தான் அமைதியின் பாதைகளாக இருக்க முடியும். அதை விட்டுவிட்டு, நம் சொந்த விருப்பப்படி வாழ்க்கை பயணத்தைத் தொடரும் போதுதான் அங்கு இடறி வீழ்கிறோம். இங்குதான் அமைதி நம்மிடமிருந்து அகன்று போகிறது. இறைவன் காட்டும் பாதையில் முட்கள் இருக்கலாம். கரடு முரடானதாக இருக்கலாம். ஆனால், அதை எதிர்கொள்வதற்கான மனபலத்தை நிச்சயம் அவர் தருவார். எசாயா இறைவாக்கினர் வழியாக ஆண்டவர் கூறுகிறார்.
""பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்ல வேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்கு செவி சாய்த்திருப்பாயானால் உன் நிறை வாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும்(எசாயா 48:17-18)''.
அதனால், இறை கட்டளைகளுக்குக் கீழ்படியாத தருணங்களை நினைவில் கொண்டு வந்து ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்போம். இது இழந்த சமாதானத்தை நாம் மீண்டும் பெறுவதற்கு நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றும்.