முகப்பு
வெள்ளிமணி

குரங்குகள் பூச்சாத்தி வழிபடும் தலம்!

கைகளில் பூக்களை எடுத்துக் கொண்டு மனிதர்கள் கோயிலுக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஆலயத்தில் குரங்குகள் வழிபடச் செல்கின்றன. அதிசயம்தான் இது.

Updated On : 1 நவம்பர், 2012 at 1:46 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:55 AM

கைகளில் பூக்களை எடுத்துக் கொண்டு மனிதர்கள் கோயிலுக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ஆலயத்தில் குரங்குகள் வழிபடச் செல்கின்றன. அதிசயம்தான் இது.

திருவெறும்பூரில் எறும்புகள் இறைவனை வழிபட்டன. ஆனைக்காவில் யானை வழிபட்டது. இங்கோ குரங்குகள் இறைவனை வழிபடுகின்றன.

ஆம். திருக்குரக்காவல் என்ற திருத்தலத்தில் அருளாட்சி செய்துவரும் இறைவனுக்குத் தனித்தன்மையுண்டு. இந்த சிவபெருமான் அடியார்கள் விரும்பிய வரமெல்லாம் அளித்து பெருமை சேர்க்கிறார். வரம் கேட்காமலே இந்த சிவபெருமான் தம்மை வணங்கி நிற்கும் பக்தர்களின் மன ஆசைகளை நிறைவேற்றி அருள்கிறார்.

Advertisement

இந்த ஈசனை அனுமன் வழிபட்டுத் தரிசனம் கண்டிருக்கிறார். இதை நினைவு படுத்தும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை குரங்குக் கூட்டங்கள் இத்திருத்தலம் வந்து இறைவனை வழிபட்டு பூச்சாற்றிவிட்டு வணங்கிச் செல்கின்றன. வரும் போது பூக்களை ஏந்திவந்து குரங்குகள் பிரார்த்தனை செய்து செல்வது இன்றும் அதிசயச் செயலாக நடந்து வருகிறது. இத்திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.