முகப்பு
வெள்ளிமணி

வீரத் தலங்கள்

சிவபெருமான் தமது வீரத்தைக் காட்டிய இடங்கள் எட்டு.

Updated On : 26 அக்டோபர், 2012 at 9:27 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:51 AM

சிவபெருமான் தமது வீரத்தைக் காட்டிய இடங்கள் எட்டு. இதை சிவபுராணம் "அஷ்ட வீரத்தலங்கள்' என்று குறிப்பிடுகின்றது.
 திருக்கோவூலூர் - அந்தகாசுரனை அழித்த இடம்; திருக்கண்டியூர் - பிரம்மன் சிரசு அரிந்தது; திருக்கடவூர் - காலனை உதைத்தது; திருவதிகை - முப்புரம் எரித்தது; வழுவை - யானையின் தோலை உரித்தது; திருப்பறியலூர் - தச்சன் வேள்வியைத் தகர்த்தது; திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது; திருவிற்குடி - ஜலந்தராசுரனை அழித்தது.
 இந்த எட்டு புனிதத் தலங்களும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் திருத்தலங்களாகவும், கர்ம வினைகளை நீக்கும் தலங்களாகவும், தீராத நோய் போக்கும் - தோஷங்களை விளக்கும் பரிகாரத் தலங்களாகவும் திகழ்கின்றன.
 இத்திருத்தலம் எட்டிலும் சிவபெருமான் இன்றும் கருணை மழை பொழிந்து வருகிறார். பக்தர்கள் இந்த எட்டு வீரத் தலங்களுக்கும் சென்று வந்தால் நன்மை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.