முகப்பு
வெள்ளிமணி

படிப்பினை போதிக்கும் பதினெண்படி!

கார்த்திகை மாதத்தில் செய்கின்ற பூஜை, தானம், புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுதல்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:22 AM
பகிர்:

கார்த்திகை மாதத்தில் செய்கின்ற பூஜை, தானம், புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுதல், அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் போன்றவை புண்ணிய பலன்களை தரும் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

அதற்கேற்ப சபரிமலை யாத்திரைக்காக விரதம் மேற்கொள்பவர்கள் கார்த்திகை 1 ஆம் தேதி, மாலை அணிந்துகொண்டு நோன்பைத் துவங்குவர். ஒற்றுமையின் கீதமான சரணகோஷத்துடன் தலையில் இருமுடிக்கட்டுடன் சபரிமலைச் சென்று அங்கு பதினெட்டுப் படிகளை கடந்து சென்று ஐயனை தரிசிப்பதே அவர்களுடைய குறிக்கோள்! அந்த

ஆன்மிக அனுபவமே சபரிமலை யாத்திரை.

புராண வரலாற்றின்படி, ஐயனின் அருளால் சாபம் நீங்கப்பெற்ற "வித்யாதர ஸ்த்ரி' என்னும் தேவலோக மங்கை, ஐயப்பனை 18 முறை பிரதட்சிண நமஸ்காரம் செய்து, சகலருக்கும் பிறவி சாபவிமோசனம் கோரினாள். அப்பெண் தன்னை 18 முறை நமஸ்கரித்து வேண்டிக் கொண்டதால், 18 சித்திகளையும் 18 படிகளாக்கி, தவ வாழ்கை மேற்கொண்டு சபரி

மலையில் பக்தர்களுக்கு அருள்கிறார் ஐயப்பன்!

மற்றொரு கூற்றின்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள பதினெட்டுப் படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தின் அம்சமாக பூஜிக்கப்படுகிறது. எல்லாவித உலகியல் மயக்கங்களையும் கடந்து இறைவனிடம் பரிபூரணமாக சரணடைந்தால்தான் மெய்ஞானம் பெறமுடியும் என்பது இந்து மதத்தின் தத்துவம். அதற்கேற்ப சபரிமலையில் ஒவ்வொரு படியிலும் அடியெடுத்து வைக்கும்பொழுது ஒவ்வொரு தீயபழக்கமும் நம்மைவிட்டு விலகிவிடுவதாக ஐதீகம்.

ஐயப்பன், சகல ஜீவராசிகளையும் இரட்சிப்பதால் சாஸ்தா என்னும் பெயரில் சபரிமலையில் கோயில்கொண்டிருக்கிறார். அந்த சாஸ்தாவின் சரித்திரத்தில் பல படிப்பினைகள் இருக்கின்றன. சபரிமலை மகத்துவம் தாங்கிய மலை. சைவம், வைணவம், சாக்தம், கெüமாரம், காணாபத்தியம், செüரம் என்று சொல்லப்படுகின்ற ஆறு சமயக் கூட்டுறவும் ஒருங்கே அமையப்பெற்றது. வேதாந்த யோக ஞான விளக்கமுடையது.

தேவர்களின் இடர்நீங்கி, தெய்வக்காதல் சிறக்க, பண்ணிய தவம் பலிக்க, சாபவிமோசனம் பெற,

தர்மம் தழைக்க, அஞ்சாமை ஓங்க, மரணபயம் ஒழிய, இளமை, வீரம் எழிலுற, பிரம்மச்சரிய விரதத்தின் பெருமை தெரிய, சமத்துவத்தின் உண்மை தத்துவம் விளங்க, தூயவாழ்வு முறைகளை நெறிப்படுத்த, பக்தர்களைக் காக்க அரனின் இச்சாசக்தியாகவும், அரியின் கிரியா சக்தியாகவும் விளங்கி அவதாரம் செய்த ஐயப்பனை சபரிமலையில் தரிசிக்க, முறைப்படி விரதம் மேற்கோண்டு பதினெண்படிகளையும் கடந்து தரிசிப்பதுதான் சாலச்

சிறந்தது.

"பதினெட்டுப் படிகளிலே சரணமய்யப்பா

பக்குவமாய் கோயில் கொண்டாய் சரணமய்யப்பா'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.