வெள்ளிமணி

விநாயக நவராத்திரியில் கணேச அருகாமிர்த வழிபாடு!

தினமணி

அம்பிகை வழிபாடு சாரதா நவராத்திரியாக ஒன்பது நாள்கள் கொண்டாடப்படுவதைப் போன்று விநாயகருக்கும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திக்கு முன்பாக ஒன்பது நாள் "விநாயக  நவராத்திரி' விழா வருகிறது.  

ஆகஸ்ட் 16 முதல் 24 வரை கொண்டாட வேண்டிய இந்த விழா நாள்களில் காலையில் உடல் சுத்தம், மன சுத்தத்துடன் தீபமேற்றி, அருகம்புல்லை மாவிலை போன்று வைத்து கலசம் வைக்கவேண்டும். சோடஷ நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து தூபதீபம் காட்டி விநாயகர் துதி பாடல்களைப் பாடி பிரசாதம் எடுத்துக் கொண்டு  ஒருபொழுது உணவருந்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும்  குன்றத்தூர் முருகன் கோயில் அருகே பிரியும் திருநீர் மலை சாலையில் அமைந்துள்ள தோரண கணபதி கோயிலில்  பக்த கோடிகள் விநாயக நவராத்திரியை விசேட நிகழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்.  ஆகஸ்ட் 16 முதல் நாள் மகா கணபதி ஹோமம் வலம்புரிச் சங்கு பால் அபிஷேகத்துடன் தொடங்கும். இந்த சிறப்பு பூஜையில் முறையே பக்தி கணபதி, பால கணபதி, லட்சுமி கணபதி, தருண கணபதி, சந்தான கணபதி, நர்த்தன கணபதி, ருண விமோசன கணபதி, சங்கடஹர கணபதி, ஸ்வர்ண கணபதி ஆகிய மூர்த்திகளின் வழிபாட்டுடன் நடைபெறுகின்றது.

தினமும் மாலை 6 மணிக்கு பூஜை நிறைவடைந்ததும் கடன் தீர்க்கும் பிரசன்ன ஸ்துதி பாராயணம் நடைபெற்று அருள்பிரசாதத்துடன் கணேஸ்வர சிந்தாமணி மூல மந்திர உபதேசம் வழங்கப்படுகிறது. கடன் தொல்லை தீரவும் தொழில் உயர்வுகள் ஏற்படவும் வாழ்க்கைப் பிரச்னைகள் தீர்ந்து நலம் பெறவும் தோரணரை விநாயக  நவராத்திரி காலத்தில் வழிபடுவோம்.

கணேச அருகாமிர்த பூஜை: விநாயகருக்குச் சாற்றப்படுகிற அருகம்புல் கொண்டு செய்யப்படுவது தூர்வாயுக்ம பூஜை  என்றும்;  21 நாமாவளி அர்ச்சனையை அருகுகிட்ட நீர் வைத்து அதில் வாசனை திரவியங்கள் இட்டு, அருகாமிர்தம் பூஜை நடத்தி அப்புனித நீரை அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதமாக வழங்குகிறார்கள். செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளிலும் வளர்பிறை சதுர்த்தி அன்றும் தோரணர் சந்நிதியில் அருகாமிர்தம் அருந்தி அவரை பிரசன்ன துதியால் வழிபடுவோர்க்கு கடன்கள் பனிபோல் உருகி ஓடி திருமகள் அருள்பார்வை கிட்டும்.
- கே. குமார சிவாச்சாரியார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT