நம்மை தம் சீடராக அழைக்கும் இயேசு!
வேதாகமத்தில் இயேசு தம் சீடரை அழைத்து ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சிகள் பல உண்டு. மிக சாதாரண எளிமையான சாமான்ய மனிதரையே தம் சீடராக அவர் ஏற்றுக்கொள்கிறார். இந்நிகழ்ச்சி லூக்கா 5:1 -11 இல் உள்ளது.
வேதாகமத்தில் இயேசு தம் சீடரை அழைத்து ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சிகள் பல உண்டு. மிக சாதாரண எளிமையான சாமான்ய மனிதரையே தம் சீடராக அவர் ஏற்றுக்கொள்கிறார். இந்நிகழ்ச்சி லூக்கா 5:1 -11 இல் உள்ளது.
""பின்பு இயேசு கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது திரளனான ஜனங்கள் தேவ வசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருக்கினார்கள்.
அப்போது கடற்கரையிலே நின்ற இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். இயேசு அந்தப் படகுகளில் ஒன்றில் ஏறினார். அது சீமோனுடையாயிருந்தது. அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும் படி அவனைக் கேட்டுக்கொண்டு அந்தப் படகில் உட்கார்ந்து ஜனங்களுக்கு போதகம் பண்ணினார்.
இயேசு போதகம் பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி ""ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய் மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார்.
அதற்கு சீமோன், "" ஜயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப் பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையை போடு
கிறேன்'' என்றார்.
அந்தபடியே அவர்கள் செய்து தங்கள் வலைகிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது அந்தப் படகிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும் படிக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்த இரண்டு படகுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து, ""ஆண்டவரே, நான் பாவியான மனிதன். நீர் என்னை விட்டுப் போகவேண்டும்'' என்றார்.
மற்றவர்களும் பிரமித்தார்கள்.
இயேசு சீமோனை நோக்கி ""பயப்படாதே, இதுமுதல் நீ மனிதர்களை பிடிக்கிறவனாயிருப்பாய்'' என்றார்.
அவர்கள் படகுகளை கரையிலே கொண்டு போய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு அவருக்கு பின் சென்றார்கள். இவ்வாறு ஓர் அற்புதத்தை இயேசு நடப்பித்து சீமோன், யோவான், யாக்கோப்பு, அந்திரேயா ஆகியோரை தம் சீடராக அழைத்து அவர்களுக்கு கர்த்தரை அறியவும் போதிக்கவும் நல்வழிபடுத்தவும் அற்புதங்களை நடப்பிக்கவும் சீடராகத் தெரிந்து கொண்டார்.
இச்சீடர்கள் இன்றும் தம் இறை செய்தியை வேதாகமத்தில் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் வழியாக நமது ஆன்மிக குருவாக இருக்கின்றனர். குரு என்றால் இருள் போக்குபவர். நல்வழி காட்டுபவர் என்று பொருள்படும். இயேசுவே நம் குரு. நாம் இயேசுவைப் போல அன்புள்ளவராக நல்வழி நடத்துபவராக மற்றவர்களுக்கு சேவை செய்பவராக, தியாகம் செய்பவராக
இருப்போம்.