வெள்ளிமணி

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

DIN

• என் தந்தை, என் தாய், என் மனைவி, என் வீடு என்று இவ்வாறு உண்டாகும் "எனது' என்னும் உணர்ச்சியே மோகம் எனப்படும்.
- பத்மபுராணம்

• நீரில் கரைந்துபோன உப்புக் கட்டியைக் கண்ணால் காண முடியாது; நாவினால் ருசித்தறியலாம். அவ்வாறே உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவியிருக்கும் பிரம்மத்தை வெளி இந்திரியங்களால் அறிய முடியாது. 

• தீர்க்கதரிசியாகிய கருணை நிறைந்த குருவின் உபதேசத்தால் ஏற்படும் ஞானம், அக்ஞானம் நீங்குவதால்தான் அறிய முடியும். அந்த உபதேசமாவது ""உன்னைச் சுற்றிக் காணப்படும் உலகம் நீயன்று. நீ பிரம்மமே.''

• நல்லோர்களின் கூட்டுறவால் பற்றின்மை ஏற்படுகிறது. பற்றின்மையால் மாயையிலிருந்து விடுதலை ஏற்படுகிறது. மாயையிலிருந்து விடுதலை கிடைத்தால் என்றும் மாறாத உண்மை உண்டாகிறது. மாறாத உண்மையை உணரும்போது ஜீவனுக்கு முக்தி ஏற்படுகிறது. (பஜகோவிந்தம்)

• "எனக்குக் குணமும் இல்லை; செயலுமில்லை. நான் என்றும் இருப்பவன், சுதந்திரமானவன். அழியாதவன்; அஸத்தான உடலல்லன்'' என்று இங்ஙனம் அறிவதுதான் ஞானம்.

• வைராக்கியத்தின் பயன் ஞானம்; ஞானத்தின் பயன் விஷய சுகங்களை நாடாமல் ஆத்மானந்தத்தை அனுபவித்தல்; அதனால் விளைவது பரம சாந்தி. 

• முக்தியை விரும்பி ஒருவன் காசிக்கு யாத்திரை சொல்லலாம்; விரதமிருக்கலாம்; ஏழைகளுக்குத் தானம் செய்யலாம்; ஆனால் ஞானமின்றி இவை முக்தியளிக்கமாட்டா.
- ஆதிசங்கரர்

• இறைவனைத் தவிர்த்த மற்ற எல்லா விஷயங்களையும் முற்றிலும்விட்டு, அவனுடைய திருவடிகளில் உங்களுடைய ஆத்மாவைச் சமர்ப்பியுங்கள். அவ்வாறு உய்வடையுங்கள்.

• ஆத்மா அழிவற்றது. நிலையானது. உடலோ மின்னலைக் காட்டிலும் நிலையற்றது. இவ்வாறு உள்ள நிலைமையில் இறைவனை நினைத்துக்கொண்டே இருங்கள்.

• "நான்', "என்னுடையது' என்று இரண்டு வகைப் பற்றுக்களையும் வேரற (வாசனையும் இல்லாதபடி) அழித்துவிட்டு இறைவனைச் சேருங்கள்.

• எல்லாச் செல்வங்களும் இறைவனுக்கு உரியவை. நாமும் அவனுடைய சொத்துக்கள் என்று நினையுங்கள்.

• இறைவனால் இறைவனுக்குத் தொண்டு செய்வதற்கென்று கொடுக்கப் பெற்ற நமது மனம், மொழி, மெய் மூன்றையும் பிற விஷயங்களிலிருந்து திருப்பி, அவனிடம் வையுங்கள். அவ்வாறு செய்தால், அவனுடைய தொண்டுகளுக்கு விரோதமான இடையூறுகள் ஒழியும். 

• எண்ணிறந்த ஜீவன்களையும், முடிவற்ற கல்யாண குணங்களையும் உடையவன் இறைவன். அவனுடைய நழுவ விடாத திருவடிகளை அடையுங்கள். 
- நம்மாழ்வார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

SCROLL FOR NEXT