நிகழ்வுகள்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சோற்றுத்துறை அருள்மிகு அன்னபூரணி அம்பிகா சமேத அருள்மிகு ஓதனவனேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மார்ச் -30 பங்குனி உத்திரத்தன்று தீர்த்தவாரி, ரத உற்சவம்
பங்குனி உத்திர மஹோத்ஸவம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சோற்றுத்துறை அருள்மிகு அன்னபூரணி அம்பிகா சமேத அருள்மிகு ஓதனவனேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மார்ச் -30 பங்குனி உத்திரத்தன்று தீர்த்தவாரி, ரத உற்சவம் நடைபெறும். மார்ச் -31 கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளல் மற்றும் விடையாற்றியுடன் உற்சவம் நிறைவு பெறும்.
விழுப்புரம் மாவட்டம், திருவாமாத்தூர். அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய அபிராமேஸ்வரர் திருக்கோயிலில் 12 நாள் விழாவாக, பங்குனி உத்திரப் பெருவிழா. 30-3-2018, காலை 9.00 மணிக்கு நடராஜர் புறப்பாடு. பகல் 10.00 மணிக்கு உத்திர தீர்த்தம். மாலை 5.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்குதல், பஞ்சமூர்த்தி விழா.
பங்குனி உத்திர திருக்கல்யாணம்
காவேரிப்பாக்கம் அருகில் உள்ள துரைப்பெரும்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ பந்தார்விரலி நாச்சியார் சமேத ஸ்ரீ நாட்டழகிய சிங்கர் சந்நிதியில் பங்குனி உத்திர திருக்கல்யாண மகோத்சவம் ஏப்ரல் - 1 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நடைபெறுகின்றது. அன்று மாலை 6.00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெறும்.
தொடர்புக்கு : 95661 72191.
கல்பாக்கம் அருகில் பரமேஸ்வர மங்கலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கைலாசநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா மார்ச் -31 ஆம் தேதி நடைபெறுகின்றது. அன்று காலை மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை சந்தன காப்பு அலங்காரமும், இரவு புஷ்ப அலங்காரம் சாத்துப்படிகளுடன் திருக்கல்யாண வைபவமும், வாணவேடிக்கையும், நாடகமும் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு : 99940 36216 / 97890 56615.
சென்னை, அம்பத்தூர், மேனாம்பேட்டில் அமைந்துள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இங்குள்ள தெய்வங்களுக்கு மார்ச் -30 ஆம் தேதி, மாலை 6.00 - 7.30 மணிக்குள் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
மஹாகும்பாபிஷேகம்
திருவாரூர் மாவட்டம், திருநெய்ப்பேர் கிராமத்தில் (ஏமப்பேறூர்) உள்ளது அருள்மிகு உமா மகேஸ்வரி அம்பிகா சமேத அருள்மிகு வன்மீகநாத சுவாமி திருக்கோயில். இங்கு, சுவாமி, அம்பாள் மற்றும் இதர சந்நிதிகளுக்கு மார்ச் -30 ஆம் தேதி, காலை -9.00 மணி முதல் 10.15 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திர நன்னாளில் மாலை -5.00 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணமும் 6.30 மணிக்கு மேல் நமிநந்தியடிகள் விளக்கேற்றும் வைபவம் நடைபெறும்.
தொடர்புக்கு: 94448 12040.
அரக்கோணம் அருகேயுள்ள வளர்புரம் அருள்மிகு சொர்ணவள்ளி அம்பாள் உடனுறை அருள்மிகு திருநாகேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் அருள்மிகு சிவகாமிசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு நடராஜர் பெருமான் சுவாமிகளுக்கு மஹாகும்பாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.
நாள்: 30.3.2018, நேரம்: காலை 9.00 - 10.15 மணி.
சிவாலய திருப்பணி
செங்கற்பட்டு வட்டம், சிங்கபெருமாள் திருப்போரூர் செல்லும் சாலை, கொண்டமங்கலம் கிராமம். இங்குள்ள ஸ்ரீ பிரணாம்பிகை உடனுறை ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் ஆலயம் சுமார் 1300 ஆண்டுகள் பழைமையானது.
கடந்த 2013 -ஆம் ஆண்டு திரளனான பக்தர்கள் முன்னிலையில் திருப்பணி துவக்க விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது. அருள்மிகு பிரனாம்பிகை சமேத ஈசான்ய தர்பாரண்யேசுவரர் இறைபணி டிரஸ்ட் என்ற பெயரில் வங்கி கணக்கு துவக்கப்பட்டு திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு சிவனருள் பெறலாம்.
தொடர்புக்கு: 99411 34695.
ஸ்ரீ சாஸ்தா திருக்கல்யாண மகோத்சவம்!
வில்லிவாக்கம் ஸ்ரீ ஐயப்ப பஜனை சங்கம் சார்பில் ஸ்ரீ சாஸ்தா திருக்கல்யாண மகோத்சவம் மார்ச் - 31 ஆம் தேதி சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் சத்சங்கம் தெருவில் உள்ள ஆன்மீக சமாஜம் சத்சங்கம் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு : 94441 09431.
ஸ்ரீ பாலசாஸ்தா பிரம்மோற்சவம்
திருவாரூர் மாவட்டம், சேங்காலிபுரம் அருகே உள்ள எருமத்தலை கிராமத்தில் உள்ள ப்ராசீனமான ஸ்ரீ பால சாஸ்தா கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் லட்சார்ச்சனை வைபவம் ஏப்ரல்- 4 முதல் 14 வரை நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94430 73677 / 94882 60268.
ஸம்வத்ஸரா அபிஷேகம்
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூர் ஸ்ரீ சதுர்வேத வித்யாகணபதி வேதாஸ்ரமத்தில் ஸ்ரீசதுர் வேதவித்யா கணபதிக்கு ஸம்வத்ஸரா அபிஷேகம் , வேதாஸ்ரமத்தின் 6 -ஆம் ஆண்டு மகோத்ஸவம் ஏப்ரல் -1 ஆம் தேதி நடைபெறுகின்றது. நிகழ்ச்சிகள் அன்று காலை 6.00 மணிக்கு கோ பூஜையுடன் துவங்குகின்றன.
தொடர்புக்கு : காமகோடி: 98844 02624 / 94440 51018.
மகாசுதர்ஸன ஹோமம்
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ புண்டரீக வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 20 ஆம் ஆண்டு மஹாசுதர்ஸன ஹோமம், அலங்கார திருமஞ்சன மகோத்சவம் ஏப்ரல் -8 ஆம் தேதி நடைபெறுகின்றது.
தொடர்புக்கு : ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள்
சேவாசபை- 94435 97594 / 82204 86953.