வெள்ளிமணி

மந்​தி​ரம் போற்​று​தும்... திரு​மந்​தி​ரம் போற்​று​தும்... - 14

கோயி​லில் இருக்​கும் கட​வு​ளுக்கு ஒன்​றைப் படைத்​தால், அது கட​வு​ளுக்கு மட்டுமே போய்ச் சேரும். நட​மா​டும் கோயி​லான மனி​தர்​க​ளுக்கு சென்று சேராது.

சு​ம​திஸ்ரீ

பட​மா​டக் கோயில் பக​வற்கு ஒன்​று​ஈ​யில்...

பட​மா​டக் கோயில் பக​வற்கு ஒன்​று​ஈ​யில்
நட​மா​டக் கோயில் நம்​பர்க்கு அங்​கு​ஆகா
நட​மா​டக்​கோ​யில் நம்​பர்க்கு ஒன்​று​ஈ​யில்
பட​மா​டக்​கோ​யில் பக​வற்கு அஃதாமே
(பாடல் : 1857)

கோயி​லில் இருக்​கும் கட​வு​ளுக்கு ஒன்​றைப் படைத்​தால், அது கட​வு​ளுக்கு மட்டுமே போய்ச் சேரும். நட​மா​டும் கோயி​லான மனி​தர்​க​ளுக்கு சென்று சேராது. ஆனால் நட​மா​டும் கோயி​லாக இருக்​கக்​கூ​டிய மனி​தர்​க​ளுக்கு ஒன்​றைச் செய்​தால், அது கட​வு​ளுக்​கும் சேரும்.
கட​வுள் நம்​பிக்கை இல்​லாத சிலர் இந்​தப் பாடலை எடுத்​துக்​கொண்டு, "பார்த்​தீர்​களா... திரு​மூ​லரே கோயி​லுக்​குப் போக வேண்​டாம், கட​வு​ளுக்கு எது​வும் செய்​யத் தேவை​யில்லை' எனச் சொல்​லி​யுள்​ளார் என்று பரப்​புரை செய்து வரு​கி​றார்​கள்.
திரு​மூ​லர் சிவ வழி​பாட்​டை​யும், சக்தி வழி​பாட்​டை​யும் பற்றி ஆயி​ரக்​க​ணக்​கான பாடல்​கள் பாடி​யுள்​ளார். கோயில்​க​ளில் நிய​மப்​படி பூஜை​கள் நடக்க வேண்​டும் என வலி​யு​றுத்​து​கி​றார்.​கோ​யில் வேண்​டாம் என அவர் சொல்​வ​தாக இப்​பா​ட​லைத் திரித்​துச் சொல்​லிக் கொண்​டி​ருக்​கி​றார்​கள்.
கோயி​லுக்​குப் போகும் போது வெறும் கையோடு போகக் கூடாது என நமக்கு சொல்​லித் தந்​தி​ருக்​கி​றார்​கள். பூ, ப​ழம், தேங்​காய், நெய், திரி, விளக்கு, கற்​பூ​ரம், வஸ்​தி​ரம், அபி​ஷே​கப் பொருள்​கள் என வாங்​கிக் கொண்டு போகும் போது ஒரு பத்து பேருக்கு வரு​மா​னத்தை ஏற்​ப​டுத்​தித் தரு​கி​றோம். ஒவ்​வொரு முறை கோயி​லுக்​குப் போகும் போதும், ஒரு சில​ரின் வரு​மா​னத்​திற்கு நாம் கார​ண​மாக இருக்​கி​றோம் என்​பதே உண்மை.
உன் முன்​னால் ஒரு​வன் பசி​யால் துடிக்​கிற போது, அவ​னுக்கு உணவு கொடுத்​தால் கட​வு​ளின் வயி​றும் சேர்ந்து நிறை​யும் என்​கி​றார் திரு​மூ​லர்.
அன்​ன​தா​னம் என்​பது நம் வழி​பாட்​டோடு இணைந்தே இருக்​கி​றது. காஞ்சி மகா பெரி​ய​வர் "பிடி அரி​சித் திட்டம் " என்ற அரு​மை​யான திட்டத்​தைக் கொண்டு வந்​தார். ஒவ்​வொரு வீட்டி​லும் சமைக்​கும் போது ஒரு பிடி அரிசி எடுத்து வைக்க வேண்​டும். மாதத்​தில் ஒரு நாள் சேவ​கர்​கள் மூலம் அரிசி சேக​ரிக்​கப்​பட்டு அன்​ன​தா​னத்​திற்​கும், பாட​சாலை மாண​வர்​க​ளின் உண​விற்​கும் பயன்​ப​டுத்​தப்​ப​டும்.
இதில் ஒரு நுட்பம் இருக்​கி​றது. சிலர், "மாதத்​தில் ஒரு​நாள் அவர்​கள் அரிசி வாங்க வரும் போது மொத்​த​மாக எடுத்​துக் கொடுப்​போமே... ஒவ்​வொரு நாளும் ஒரு பிடி அரிசி எடுத்து வைக்க வேண்​டுமா?' என நினைத்​தி​ருக்​க​லாம். ஒவ்​வொரு நாளும் அரிசி எடுத்து வைக்​கும் போது, ஒவ்​வொரு நாளும் அன்​ன​தா​னம் செய்த புண்​ணி​யம் கிடைக்​கும். மாதத்​தில் ஒரு​நாள் மொத்​த​மாக அரிசி கொடுக்​கும் போது, அந்த ஒரு நாளுக்கு மட்டுமே அன்​ன​தா​னம் செய்த புண்​ணி​யம் கிடைக்​கி​றது. அத​னால்​தான் ஒவ்​வொரு நாளும் சமைக்​கும் போது ஒரு பிடி அரிசி எடுத்து வைக்க வேண்​டும் என சொல்​லப்​பட்​டது.
கோவை கிருஷ்ணா கலை அறி​வி​யல் கல்​லூரி மாண​வர்​கள் ஒவ்​வொரு வரு​ட​மும், கல்​லூ​ரி​யில் பொங்​கல் விழா​வின் போது "ஒரு பிடி அரி​சித் திட்டம்' என கொண்​டா​டு​கி​றார்​கள். ஒவ்​வொரு மாண​வ​னும் ஒரு பிடி அரிசி எடுத்​துக் கொடுத்து, அந்த அரிசி கோவை​யில் உள்ள சில அநாதை இல்​லங்​க​ளுக்கு ஒரு ஆண்​டுக்​கான உண​விற்​காக அனுப்​பப்​ப​டு​கி​றது. இதை ஒவ்​வொரு வரு​ட​மும் செய்து வரு​கி​றார்​கள்.
ஒரு மனி​த​னுக்கு உணவு தரு​கிற போது, அது கட​வு​ளைச் சென்று சேரும். நேர​டி​யாக கட​வு​ளுக்கு செய்​தால் அது மனி​தர்​க​ளுக்கு சேராது என்​ப​தற்கு வாரி​யார் சுவா​மி​கள் ஒரு​முறை விளக்​கம் சொன்​னார். ஒரு கடி​தத்தை தபால் பெட்டி​யில் போட்டால் அது தலைமை தபால் நிலை​யத்​திற்கு போய் விட்டு, உரி​ய​வ​ரி​டம் போகும். ஆனால் நேர​டி​யாக தலைமை தபால் நிலை​யத்​தில் கொண்டு போய் போட்டால் அது தபால் பெட்டிக்கு வராது.
கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதி​பர் கிருஷ்​ணன் ஒரு​முறை தன் நண்​ப​ரு​டன் திருப்​ப​திக்கு போயி​ருக்​கி​றார். தரி​ச​னத்​திற்​காக வரி​சை​யில் நின்​றி​ருந்த போது, அவ​ரு​டைய நண்​பர் கையில் ஒரு பெட்டி வைத்​தி​ருப்​ப​தைப் பார்த்து "அது என்ன?' என விசா​ரித்​தி​ருக்​கி​றார். "இதில் ஐந்து லட்சம் பணம் இருக்​கி​றது. வியா​பா​ரத்​தில் நல்ல வரு​மா​னம் வந்​த​தால், இதை உண்​டி​ய​லில் போட கொண்டு வந்​துள்​ளேன்' என நண்​பர் சொல்​லி​யி​ருக்​கி​றார்.
உடனே கிருஷ்​ணன் அந்​தப் பெட்டியை வாங்​கி​னார். அதி​லி​ருந்த பணம் முழு​மைக்​கும் கட்டண தரி​சன டிக்​கெட்​டு​களை வாங்​கித் தன் நண்​ப​ரி​டம் கொடுத்​தார். "இல​வச தரி​ச​னத்​திற்​காக வரி​சை​யில் நிற்​கும் மக்​க​ளி​டம் போய் இதைக் கொடு' என்​றார்.
அந்த டிக்​கெட்​டு​களை வாங்​கிய அத்​தனை பேரும் மிக​வும் நெகிழ்ந்து போய், "நீங்க நல்​லா​யி​ருக்​க​ணும்...​நீங்க நல்​லா​யி​ருக்​க​ணும்' என வாழ்த்​தி​னார்​க​ள். அப்​போது நண்​ப​ரைப் பார்த்து கிருஷ்​ணன் சொன்​னார்...."​இந்த பணத்தை நீ உண்​டி​யல்ல போட்டா​லும் கோயி​லுக்​கு​தான் போகப் போகுது. இப்ப நீ எல்​லா​ருக்​கும் டிக்கெட் வாங்​கிக் கொடுத்​தாய். இந்​தப் பண​மும் கோயி​லுக்​கு​தான் போகப் போகுது. ஆனா, நீ நே​ர​டியா உண்​டி​யல்ல போட்டி​ருந்​தால் இத்​தனை பேரோட வாழ்த்​தும், இத்​தனை பேரை சந்​தோ​ஷப்​ப​டுத்​தின புண்​ணி​ய​மும் உனக்​குக் கிடைச்​சி​ருக்​காது' என்​றா​ர்.
இதையே தான் திரு​மூ​ல​ரும் நமக்​குச் சொல்​கி​றார்.
பட​மா​டக் கோயில் பக​வற்கு ஒன்​று​ஈ​யில்
நட​மா​டக் கோயில் நம்​பர்க்கு அங்​கு​ஆகா
நட​மா​டக்​கோ​யில் நம்​பர்க்கு ஒன்​று​ஈ​யில்
பட​மா​டக்​கோ​யில் பக​வற்கு அஃதாமே

- (தொட​ரும் )

(கட்​டு​ரை​யா​சி​ரி​யர்: இலக்​கி​யச் சொற்​பொ​ழி​வா​ளர்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT