வெள்ளிமணி

சுப தாரை - அசுப தாரை...

DIN

ஜென்ம நட்சத்திரத்திற்கு சுப தாரைகளில் அமர்ந்த கிரகங்கள்  ஜென்ம லக்னத்திற்கு துர்ஸ்தானங்களான 6, 8, 12-ஆம் வீடுகளில் அமர்ந்தால் சுப பலன்களைக் கொடுக்க முடியாமல் போய்விடும். அதே நேரம் ஜென்ம நட்சத்திரத்திற்கு அசுப தாரையில் அமர்ந்த கிரகங்கள் ஜென்ம லக்னத்திற்கு துர்ஸ்தானங்களில் அமர்ந்தால் அந்த கிரகங்களில் பாவ பலன்களின் பின்னடைவு நீங்கி அபிவிருத்தியாகும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். 

ஜென்ம நட்சத்திரத்திற்கு அசுப தாரையில் அமர்ந்த கிரங்கள் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ராசிகளில் அமர்ந்தால் சுப பலன்களைக் கொடாமல் அசுப பலன்களை உண்டாக்க ஏதுவாகும் என்றும் கூற வேண்டும். பொதுவாக சுக்கிர பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால், சகலகலா வல்லவராவார். புதுப்புது திட்டங்களைத் தீட்டி எடுக்கின்ற செயல்களில் வெற்றி பெறுவார். 

அரசு, அரசு அதிகாரிகள் தொடர்பு சிறப்பாகவே அமையும். குறிப்பாக தாய்நாட்டையும், வெளி நாட்டையும் இணைக்கும் உன்னத வாய்ப்புகளும் கிடைக்கும். ஜீவனஸ்தானமான பத்தாமிடம் உச்ச கேந்திரமாகும். இது ஒரு சுபஸ்தானமாகும். சுபஸ்தானங்களில் சுப கிரங்கள் இருந்தால் உயர்வு என்றும், அசுப கிரகங்கள் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த பொது விதி பத்தாம் பாவத்திற்கு முழுமையாகப் பொருந்தாது என்பது அனுபவ உண்மை.

சுக்கிர பகவான் களத்திர, வாகன வீடு காரகராவார். மற்ற சுப கிரகங்களான குரு, சந்திர, புத பகவான்களைவிட நவநாகரீக ஆடம்பர முறையில் யோகம் தருவார். கலை ஞானம், எஸ்டேட், வாகன தொழில், செüபாக்கியம், தெய்வ அருள், சாஸ்திர ஞானம், வைராக்யம் ஆகியவைகள் உண்டாகும்.

ரிஷப லக்னத்திற்கு சுக்கிர பகவான் ஆறாமதிபதியுமாகி பத்தாமிடமான கும்ப ராசியில் பலம் பெற்றமர்ந்திருந்தால் பெயர் புகழ், அரசியல் செல்வாக்கு, கலைத்துறையில் ஈடுபாடு ஆகியவைகள் சிறப்புறும். 

தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்குமதிபதியான புதபகவான், அயன ஸ்தானமான பன்னிரெண்டாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். "மறைந்த புதன் நிறைந்த மதி நிறைந்த நிதி'' என்ற ஜோதிட வழக்கிற்கேற்ப சாந்தமாகவும், இனிமையாகவும் பேசி செய்தொழிலில் பல வகையிலும் வருமானம் பெறுவார். 

குழந்தைகளால் நன்மை உண்டாகும். சிறப்பான முறையில் கல்வி, செல்வம், குடும்பம் ஆகியவைகள் உண்டாகும். சிலர் மேதாவிலாசத்துடன் காணப்படுவார்கள். நல்ல மேதைகளாகவும், ஜோதிடம் போன்ற விஷயங்களில் புரிதலும் உண்டாகும். சுபச் செலவுகளை அதிகம் செய்ய வேண்டி வரும். வெளிநாடு தொடர்புடைய வியாபாரம், வெளிநாட்டுப் பயணம் ஆகியவைகள் நலம் பயக்கும்.

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கதிபதியான சந்திரபகவான், சுகஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சம் பெறுகிறார். சந்திரபகவான் மனோகாரகர், அன்னை காரகர், தனு (உடல்) காரகர். இதனால் சமயோஜித புத்தியால் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் யோகமுண்டாகும். மூன்றாமிடத்துக்கு ஒரு சுபம் உண்டாகுமானால், நெஞ்சுரமிக்கவர், தைரியசாலி என்ற பெயர் உண்டாகும். போட்டி பந்தயங்
களிலும் வெற்றி உண்டாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT