வெள்ளிமணி

புகழ், அந்தஸ்து உயரப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எண்ணங்களைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியமும் மனவளமும் மேம்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் உதவுவார்கள்.  வியாபாரிகளுக்கு சிறு அலைச்சல்கள் உண்டாகும். விவசாயிகள் தங்கள் காரியங்களில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவார்கள். 

அரசியல்வாதிகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.

பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

அரசு தொடர்பான விஷயங்கள் சாதகமாகவே முடிவடையும்.  விவேகத்துடன் செயல்படுவீர்கள்.  சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் புதிய நுட்பங்களைக் கற்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து நடப்பார்கள். வியாபாரிகள் சிந்தித்துச் செயல்பட வேண்டும். விவசாயிகள் கடினமாக உழைப்பார்கள்.  

அரசியல்வாதிகளின் திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் எண்ணங்களைப்புரிந்து செயல்படுவார்கள்.

பெண்களுக்கு அமைதியான சூழல் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.  வயிற்று உபாதைகள் தோன்றி மறையும். நிலம் வாங்க முன்பணம் தருவார்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைச் சுறுசுறுப்பாகச் செய்து முடித்துவிடுவார்கள்.  வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி செயல்படுவார்கள்.  விவசாயிகளைத் தேடி புதிய குத்தகை வரும். 

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத்துறையினர் புதிய திறன்களைப் பெறுவார்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். 

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. பூர்விக சொத்துகளில் வருவாய் வரத் தொடங்கும்.  குழந்தைகளால்  மகிழ்ச்சி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைக் காண்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய இலக்குகளை எட்டுவார்கள்.  

விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளில் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் கடமை உணர்வைப்பாராட்டுவார்கள். பெண்கள் பேச்சில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.

 மாணவர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள்.
சந்திராஷ்டமம் -இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.  மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். முடங்கி நின்ற காரியங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களைக் கவருவார்கள். வியாபாரிகள் தீட்டிய திட்டங்களை நிதானமாகச் செயல்படுத்துவீர்கள். விவசாயிகள் விவசாய நிலங்களை வாங்கி பயிர் விளைச்சலை பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் பொருளாதாரம் சிறக்கும்.

பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வருமானம் உயரக் காண்பீர்கள். பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.  குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை முடித்துவிடுவார்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வார்கள்.  விவசாயிகளின் திறமைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.  

அரசியல்வாதிகள் கடினமான காரியங்களையும் சுலபமாக முடித்துவிடுவார்கள்.  கலைத்துறையினர் வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவீர்கள்.

பெண்களுக்கு கணவருடன் பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 24,25.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வருமானம் சீராகவே இருக்கும். குடும்பத்துக்கு கூடுதலாகவே செலவழிப்பீர்கள்.  முடிவுகளை விரைவில் எடுப்பீர்கள்.  தொழிலில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவுக்கு தடைகள் ஏற்படாது. வியாபாரிகள் விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் ஈடேறும்.  பெண்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். மாணவர்கள் ஆசிரியர்களை அரவணைத்துச் செல்வார்கள்.

சந்திராஷ்டமம் - பிப். 26,27,28.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உடல் நலமும் மனவளமும் மேம்படும். வருமானம் உயரும்.  பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.  தெய்வ நம்பிக்கை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள்.

வியாபாரிகள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.  விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகளுக்குச் செலவழிக்க நேரிடும்.

அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு உதவி கிடைக்கும். பெண்கள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்குவீர்கள்.  மாணவர்கள் புதிய நண்பர்களை நம்ப வேண்டாம்.

சந்திராஷ்டமம்}மார்ச் 1,2.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புகழ், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்திருந்த விஷயம் நடந்தேறும்.  தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் விலகும்.

வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தைக் காண்பார்கள். 

அரசியல்வாதிகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினர் முக்கிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

பெண்கள் போதுமென்ற மனநிலையோடு இருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் சிறப்பான வளர்ச்சி அடைவீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். யோகா, தியானம் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்களின் சமயோஜித புத்திக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.  

வியாபாரிகள் புதிய முதலீடுகளை மேற்கொள்வார்கள்.  விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திரும்ப செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் சாதனைகளைச் செய்வார்கள். கலைத்துறையினருக்கு பணவரவு கூடும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தாரிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். நல்ல செய்தி கிடைக்கும்.  சுபகாரியங்களை நடத்துவீர்கள்.  பெற்றோரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்}வாங்கல் நல்ல முறையில் நடக்கும். விவசாயிகள் கடுமையாக உழைத்து பலனைப்  பெறுவார்கள்.  

அரசியல்வாதிகள் பணிகளைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

பெண்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும். மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். விடா முயற்சி வெற்றியைத் தரும். வழக்கு விஷயங்கள் முடிவதற்கு காலதாமதமாகும். எதிர்ப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் நட்போடு நடப்பார்கள். வியாபாரிகளின் கடன் வசூலாகும். விவசாயிகள் பிறரை அனுசரித்து நடப்பார்கள்.  

அரசியல்வாதிகளுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும்.  கலைத்துறையினர் ரசிகர்களை அனுசரித்து நடப்பார்கள்.

பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் நற்பெயரை எடுப்பார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடன்குடி அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தடை கோரி திமுக வழக்குரைஞா் அணியினா் மனு

வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

‘தூத்துக்குடியில் குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்’

குமரியில் இன்று 45 மணி நேர தியானம் தொடங்குகிறாா் பிரதமா் மோடி

SCROLL FOR NEXT