கலியுக கண் காணும் தெய்வமாய், எண்ணத்தால் வளம் அளித்து வரங்களை வழங்கி, வாழ்விக்கும் தெய்வமாய் அன்னை த்ரீசக்தி வராஹி விளங்குகிறார்.
உலக வரலாற்றில் இறைமருத்துவமனையாய், நோய் தீர்க்கும் úக்ஷத்திரமாய் வளமும் வரமும் அளிக்கும் "ஆதி வராஹியாய்' கோயில் நிறுவப்பட்டுள்ளது.
பஞ்சபூதங்களின் சங்கமமாய், விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் முப்பெரும் சக்திகளைத் தன்னகத்தே உள்ளடக்கி 16 வளங்களின் பிரதிபலிப்பாய் 16 அடி உயரத்தில் ஞானாசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி மூன்றும் இணைந்த த்ரீசக்தியாய் தன் கரங்களில் சுவடி, சூலம், சக்கரம் ஏந்திய ஆதிசக்தியாய் "த்ரீஸ்தலம் ஸ்ரீவாராஹி úக்ஷத்திரம்' யாகரிஷி வராஹ குருஜியால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் தனித்துவ ஸ்தலமாய், அனைத்து ரூபங்களும், யந்திரங்களும் பிரதிஷ்டிக்கப்பட்டு, மக்கள் சேவைக்காக, மானுடர் தேவைக்காக "திருப்பம் தரும் த்ரீஸ்தலமாய்' முழு வடிவம் பெற்றுள்ளது.
ஏழு நிலை கொண்ட ராஜகோபுரத்தில் பிரபஞ்சத்தின் சக்திகளைத் தன்னகத்தோடு கிரகிக்கும் சக்தியாய் 5.65 அடி உயரத்தில் த்ரீஸ்தல ஹேத்திரத்துக்கு மகுடமாய் மகா கும்பக் கலசம் அமைக்கப்பட்டுள்ளது. 7.6 அடி உயரத்தில் செல்வங்களையும் வரங்களையும் அளிக்கும் ஸ்ரீராஜ கணபதி, 27 நட்சத்திரங்களின் சக்தி ரூபமாய் பயம் போக்கும் மகா சிவசக்தி, த்ரீசக்திகளான ஸ்ரீமகா சரஸ்வதி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமகாசக்தி, வாழ்வில் மங்களம் அளிக்கும் ஜல வாராஹி, அச்சம் தீர்க்கும் அக்னி வாராஹி, பேராற்றலை அளிக்கும் 16 அடி உயரஆதி வாராஹி, காந்தப் பேரலைகளை உணர்த்தும் ஐந்தடி உயர மஹா மேரு} ஸ்ரீமகா வாராஹி இயந்திரம் உள்ளிட்ட சந்நிதிகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்புமிக்க கோயில் வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகொண்டாவை அடுத்த கீழாச்சூர் ஸ்ரீராமாபுரம் சாலையில் உள்ள துர்வாஸ்ரம வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஜூலை 6 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, பூஜைகள் ஜூலை 2}இல் தொடங்குகின்றன.
}ஏ.என். பத்மநாபன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.